பொது செய்தி

தமிழ்நாடு

செம்மொழி நிறுவனம் இ.சுந்தரமூர்த்தி நியமனம்

Added : செப் 22, 2021
Share
Advertisement
சென்னை:செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவன துணைத் தலைவராக, பேராசிரியர் இ.சுந்தரமூர்த்தி இன்று பதவி ஏற்கிறார்.செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனம், மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறையின் கீழ் செயல்பட்டு வருகிறது. இது, சென்னை தரமணியில் இயங்கி வருகிறது. பெரும்பாக்கத்தில் புதிய கட்டடம் கட்டி விரைவில் திறக்கப்பட உள்ளது. இந்த நிறுவனத்தின் தலைவராக, முதல்வர் ஸ்டாலினும்,
 செம்மொழி நிறுவனம் இ.சுந்தரமூர்த்தி நியமனம்

சென்னை:செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவன துணைத் தலைவராக, பேராசிரியர் இ.சுந்தரமூர்த்தி இன்று பதவி ஏற்கிறார்.

செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனம், மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறையின் கீழ் செயல்பட்டு வருகிறது. இது, சென்னை தரமணியில் இயங்கி வருகிறது. பெரும்பாக்கத்தில் புதிய கட்டடம் கட்டி விரைவில் திறக்கப்பட உள்ளது. இந்த நிறுவனத்தின் தலைவராக, முதல்வர் ஸ்டாலினும், இயக்குனராக பேராசிரியர் சந்திரசேகரனும் உள்ளனர். இதன் துணைத் தலைவராக இருந்த பேராசிரியர் தெ.ஞானசுந்தரத்தின் பதவி காலம் முடிவடைந்ததால், புதிய துணைத் தலைவராக பேராசிரியர் இ.சுந்தரமூர்த்தியை, மத்திய அரசு நியமித்துள்ளது.

அவர் இன்று பதவி ஏற்கிறார். இவர், 2023 செப்., வரை பதவியில் இருப்பார்.புதிய துணைத் தலைவராக பதவி ஏற்கும் இ.சுந்தரமூர்த்தி, தஞ்சை தமிழ் பல்கலை துணைவேந்தர், செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவன முதுநிலை ஆய்வாளர், சென்னை பல்கலை தமிழ் இலக்கியத் துறை தலைவர், பதிப்புத் துறை தலைவர் உள்ளிட்ட பதவிகளை வகித்துள்ளார். தற்போது, சென்னை உ.வே.சா., நுாலகத் துணைத் தலைவராகவும் உள்ளார். தமிழ் மொழி, இலக்கணம், சுவடி உள்ளிட்ட பொருண்மைகளில் 70க்கும் மேற்பட்ட நுால்களை எழுதி உள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X