மாநிலத்தில் கோவில்களை, அபிவிருத்தி செய்ய நடவடிக்கை:அமைச்சர் சசிகலா ஜொல்லே

Added : செப் 22, 2021
Share
Advertisement
பெங்களூரு:"மாநிலத்தில் கோவில்களை, அபிவிருத்தி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது," என அறநிலையத்துறை அமைச்சர் சசிகலா ஜொல்லே தெரிவித்தார். சட்டமேலவை கேள்வி நேரத்தில், நடந்த விவாதம்:அமைச்சர் சசிகலா ஜொல்லே: மாநிலத்தின் பல இடங்களில் புராதன கோவில்கள் சிதிலமடைந்திருப்பது, அரசின் கவனத்துக்கு வந்துள்ளது. தனியார் ஒருங்கிணைப்பில், கோவில்களை புதுப்பிக்கும் பணியில்
மாநிலத்தில் கோவில்களை, அபிவிருத்தி செய்ய நடவடிக்கை:அமைச்சர் சசிகலா ஜொல்லே

பெங்களூரு:"மாநிலத்தில் கோவில்களை, அபிவிருத்தி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது," என அறநிலையத்துறை அமைச்சர் சசிகலா ஜொல்லே தெரிவித்தார்.

சட்டமேலவை கேள்வி நேரத்தில், நடந்த விவாதம்:

அமைச்சர் சசிகலா ஜொல்லே:

மாநிலத்தின் பல இடங்களில் புராதன கோவில்கள் சிதிலமடைந்திருப்பது, அரசின் கவனத்துக்கு வந்துள்ளது. தனியார் ஒருங்கிணைப்பில், கோவில்களை புதுப்பிக்கும் பணியில் அறநிலையத்துறை ஈடுபட்டுள்ளது.

காங்., -- ரமேஷ்:

கோவில்களின் அபிவிருத்திக்கு, 500 கோடி ரூபாய் ஒதுக்கியுள்ளதாக, அரசு கூறியுள்ளது; ஆனால் நிதி வழங்கப்படவில்லை.

அமைச்சர்:

பட்ஜெட்டில் ஒதுக்கப்பட்ட நிதி, நல்ல முறையில் பயன்படுத்தப்படும்.அப்போது காங்கிரசின் சில உறுப்பினர்கள், ஆட்சேபம் தெரிவித்து, 'கோவில்களை பா.ஜ., அரசியலுக்கு பயன்படுத்துகிறது. அபிவிருத்திக்கு நிதி வழங்குவதில்லை' என்றனர்.

அமைச்சர் கோட்டா சீனிவாச பூஜாரி:

மாநிலத்தில் 36 ஆயிரத்துக்கும் அதிகமான கோவில்கள் உள்ளன. 24 ஆயிரம் கோவில்கள், குறைவான வருவாய் கொண்டவை. ஒரே நேரத்தில் அனைத்து கோவில்களையும், அபிவிருத்தி செய்ய முடியாது; பணப்பற்றாக்குறை உள்ளது. ஆனால் முந்தைய அரசை விட எங்களின் அரசு, கோவில்களின் அபிவிருத்திக்கு, கூடுதல் நிதி வழங்கியுள்ளது.

பா.ஜ., -- ரவிகுமார்:

சில கோவில்களின் சொத்துகள், தனியார் நபர்களின் பெயரில் உள்ளது. இது சரியல்ல. சொத்துகள் கோவிலின் பெயரில் இருக்க வேண்டும். தனியார் நபர்களின் பெயரிலுள்ள சொத்துகளை கோவில்களின் பெயருக்கு மாற்ற வேண்டும்.

அமைச்சர் சசிகலா ஜொல்லே:

இது குறித்து, அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும். அறநிலையத் துறை கோவில்களின் சொத்துகளை, ஓட்டல் தொழில் உட்பட, மற்ற தொழில்களுக்கு ஒப்பந்த அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளது.ஒப்பந்தம் முடிந்த பின், சொத்துகள் திரும்பப்பெறுவது அவசியம். ஆனால் சிலர் தங்கள் வசம் வைத்துள்ளனர். இவ்வாறு 63 வழக்குகள் உள்ளது. விரைவில் வழக்குகளை முடிவுக்கு, கொண்டு வருவோம்.இவ்வாறு விவாதம் நடந்தது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X