ஏ.டி.எம்., மையத்தில் கொள்ளையடித்த நபர் கைது

Added : செப் 22, 2021
Share
Advertisement
பெங்களூரு:ஏ.டி.எம்., மையத்தில் பணம் செலுத்த வருவோரை ஏமாற்றி, பணம் கொள்ளையடித்த நபர், போலீசாருக்கு இலவச சட்டை கொடுப்பதற்காக, போலீஸ் நிலையத்துக்கு வந்தபோது சிக்கி, கம்பி எண்ணுகிறார்.மாண்டியாவின் நாகமங்களாவை சேர்ந்த நவீன்குமார், 25. பெங்களூரின் பி.எச்.இ.எல்., லே -- அவுட்டில் வசிக்கிறார். எலக்ட்ரிகல் ஒப்பந்ததாரருடன் பணியாற்றுகிறார். வங்கிகளின் ஏ.டி.எம்., இயந்திரத்தில் பணம்

பெங்களூரு:ஏ.டி.எம்., மையத்தில் பணம் செலுத்த வருவோரை ஏமாற்றி, பணம் கொள்ளையடித்த நபர், போலீசாருக்கு இலவச சட்டை கொடுப்பதற்காக, போலீஸ் நிலையத்துக்கு வந்தபோது சிக்கி, கம்பி எண்ணுகிறார்.

மாண்டியாவின் நாகமங்களாவை சேர்ந்த நவீன்குமார், 25. பெங்களூரின் பி.எச்.இ.எல்., லே -- அவுட்டில் வசிக்கிறார். எலக்ட்ரிகல் ஒப்பந்ததாரருடன் பணியாற்றுகிறார். வங்கிகளின் ஏ.டி.எம்., இயந்திரத்தில் பணம் செலுத்த வரும் வாடிக்கையாளர்களை கண்காணிப்பார்.

அவர்களிடம் சென்று, 'அவசரமாக பணம் தேவைப்படுகிறது. ஆனால் என் வங்கி கணக்கிலிருந்து பணம் எடுக்கும் நேரம் முடிந்துவிட்டது. ரொக்கமாக கொடுத்தால், உங்கள் கணக்குக்கு பணப்பரிமாற்றம் உடனடியாக செய்கிறேன்' என கெஞ்சுவார்.


பணம் பரிமாற்றம்



அவர்களும் பரிதாபத்துடன் பணம் கொடுப்பர். உடனே பணத்தை அந்த நபர்களுக்கு கொடுப்பதற்காக, பணம் பரிமாற்றம் செய்தது போல பொய்யான தகவலை காண்பித்து தப்பியோடி விடுவார். இதே போல, ஆகஸ்ட் 12ல், ராஜராஜேஸ்வரி நகரின் நிமிஷாம்பா சதுக்கம் அருகில் வங்கி ஒன்றின், ஏ.டி.எம்., இயந்திரத்தில் பணம் செலுத்த வந்த வாடிக்கையாளர், பணத்தை கொடுத்து ஏமாந்தார்.

இது குறித்து, ஆர்.ஆர்.நகர் போலீஸ் நிலையத்தில், அந்த வாடிக்கையாளர் புகார் அளித்தார். போலீசாரும் ஏ.டி.எம்., மையத்தில் இருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை, ஆய்வு செய்த போது, பண மோசடி செய்த நபரின் முக அடையாளம் தெரிந்தது. இதை வைத்து அவரை போலீசார் தேடி வந்தனர்.


இலவச 'ஜெர்கின்'



இந்நிலையில், உத்தரஹள்ளி சாலையின், சென்னசந்திராவில் ஹொய்சளா நிலைய போலீசார், ரோந்துப்பணியில் ஈடுபட்டிருந்த போது, அவர்களை சந்தித்த நவீன், போலீஸ் அதிகாரிகள், ஏட்டுகளுக்கு இலவசமாக, 'ஜெர்கின்' எனப்படும் மேலாடையை இலவசமாக வழங்குவதாக கூறினார். ஹொய்சளா போலீசாரும், போலீஸ் நிலையத்துக்கு வந்து, அதிகாரிகளை சந்திக்கும்படி கூறினர்.

அதன்படி நேற்று முன் தினம், அவர் போலீஸ் நிலையத்துக்கு வந்து, இன்ஸ்பெக்டரை சந்தித்தார். அவரின் முகமும், ஏ.டி.எம்., மையத்தின் கண்காணிப்பு கேமராவில் பதிவான நபரின் முகமும் ஒன்று போல இருந்ததால், அவரை பிடித்து போலீசார் முறையாக விசாரித்த போது, குற்றத்தை ஒப்புக்கொண்டார். அவரை போலீசார் கைது செய்தனர்.

உயர் போலீஸ் அதிகாரி ஒருவர் கூறுகையில், 'வங்கி மற்றும் ஏ.டி.எம்., மையத்துக்கு வரும் வாடிக்கையாளர்கள், அறிமுகமில்லாத நபர்களுடன் பேசாதீர்கள். பணத்தை போடவோ, எடுக்கவோ வரும் போது, அறிமுகமில்லாதவரிடம் உதவியை பெறாதீர்கள்' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X