இந்தியா மீண்டும் தடுப்பூசி ஏற்றுமதி உலக சுகாதார அமைப்பு பாராட்டு

Added : செப் 22, 2021
Share
Advertisement
நியூயார்க்:இந்தியா மீண்டும் தடுப்பூசி ஏற்றுமதி செய்ய முடிவெடுத்துள்ளதை, உலக சுகாதார அமைப்பு பாராட்டிஉள்ளது.இந்தியாவில் கொரோனா முதல் அலை பரவல் குறைந்த போது தான், 'கோவிஷீல்டு, கோவாக்சின்' தடுப்பூசிகள் தயாரிக்கப்பட்டன. அந்த சமயத்தில் தொற்று பரவல் குறைந்திருந்ததால், இந்தியா தடுப்பூசிகளை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்தது.ஆனால், கொரோனா இரண்டாவது அலை பரவி பாதிப்பு

நியூயார்க்:இந்தியா மீண்டும் தடுப்பூசி ஏற்றுமதி செய்ய முடிவெடுத்துள்ளதை, உலக சுகாதார அமைப்பு பாராட்டிஉள்ளது.

இந்தியாவில் கொரோனா முதல் அலை பரவல் குறைந்த போது தான், 'கோவிஷீல்டு, கோவாக்சின்' தடுப்பூசிகள் தயாரிக்கப்பட்டன. அந்த சமயத்தில் தொற்று பரவல் குறைந்திருந்ததால், இந்தியா தடுப்பூசிகளை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்தது.ஆனால், கொரோனா இரண்டாவது அலை பரவி பாதிப்பு உச்சம் அடைந்ததையடுத்து, தடுப்பூசிகள் ஏற்றுமதி செய்வதை இந்தியா நிறுத்தியது.

'தற்போது, நாட்டில் தொற்று பரவல் குறைந்துள்ளது; தடுப்பூசி உற்பத்தி அதிகரித்துள்ளது. இதையடுத்து, உபரி தடுப்பூசிகளை மீண்டும் ஏற்றுமதி செய்ய முடிவு எடுக்கப்பட்டு உள்ளது' என, மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா, கடந்த 20ல் தெரிவித்தார். இந்தியாவின் இந்த முடிவுக்கு, உலக சுகாதார அமைப்பு பாராட்டு தெரிவித்து உள்ளது.

இது குறித்து, உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ராஸ் அதனோம் கெப்ரியாசெஸ் 'டுவிட்டரில்' பதிவிட்டிருந்ததாவது:இந்தியா மீண்டும் தடுப்பூசி ஏற்றுமதி செய்ய முன்வந்து உள்ளதை, உலக சுகாதார அமைப்பு வரவேற்கிறது. பல வல்லரசுகள் இரண்டுக்கும் மேற்பட்ட 'டோஸ்' தடுப்பூசிகளை தங்கள் மக்களுக்கு செலுத்தியுள்ளன; பூஸ்டர் டோஸ்களையும் செலுத்தி வருகின்றன. ஆனால் பல ஏழை நாடுகள், தங்களது மக்களுக்கு ஒரு டோஸ் கூட செலுத்த முடியாமல் தவிக்கின்றன.

இந்நிலையில் இந்தியாவின் இந்த முடிவு, உலகளாவிய தடுப்பூசி வழங்கலில் சமநிலையை அடைய உதவும்.வரும் டிசம்பருக்குள், அனைத்து நாடுகளிலும் 40 சதவீதம் மக்களுக்கு தடுப்பூசி போடப்பட்டிருக்க வேண்டும் என்ற, உலக சுகாதார அமைப்பின் இலக்கை எட்ட, இந்தியாவின் முடிவு உதவியாக இருக்கும்.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X