பொது செய்தி

இந்தியா

மைசூர்: 30க்கும் மேற்பட்ட சாலைகளில், 300க்கும் அதிகமான பள்ளங்கள்

Added : செப் 22, 2021
Share
Advertisement
மைசூரு:மைசூரின் 30க்கும் மேற்பட்ட சாலைகளில், 300க்கும் அதிகமான பள்ளங்கள் உள்ளன. இதனால் வாகன பயணியர், உயிரை கையில் பிடித்துக்கொண்டு செல்ல வேண்டியுள்ளது.மைசூரு நகரின், சாலைகளில் பள்ளங்கள் இருப்பது, தசரா நேரத்தில் மட்டுமே, மாநகராட்சியின் நினைவுக்கு வரும். அவசர, அவசரமாக சாலை பள்ளங்களை மூடும். மற்ற நாட்களில் சாலை பள்ளங்களால், பொது மக்கள், வாகன பயணியர் தொந்தரவுக்கு ஆளானாலும்,

மைசூரு:மைசூரின் 30க்கும் மேற்பட்ட சாலைகளில், 300க்கும் அதிகமான பள்ளங்கள் உள்ளன. இதனால் வாகன பயணியர், உயிரை கையில் பிடித்துக்கொண்டு செல்ல வேண்டியுள்ளது.

மைசூரு நகரின், சாலைகளில் பள்ளங்கள் இருப்பது, தசரா நேரத்தில் மட்டுமே, மாநகராட்சியின் நினைவுக்கு வரும். அவசர, அவசரமாக சாலை பள்ளங்களை மூடும். மற்ற நாட்களில் சாலை பள்ளங்களால், பொது மக்கள், வாகன பயணியர் தொந்தரவுக்கு ஆளானாலும், மாநகராட்சி கண்டு கொள்ளாது.

மைசூரு - பெங்களூரு சாலை, நாராயண சாஸ்திரி, அசோக் சாலை, மகாத்மா காந்தி சாலை, டேங்க் பன்ட் சாலை, வினோபா சாலை, தன்வந்த்ரி சாலை.இர்வின் சாலை, வால்மீகி சாலை, கே.ஆர்.எஸ்., சாலை உட்பட, பல சாலைகள் பல பணிகளுக்காக தோண்டப்பட்டுள்ளது. மீண்டும் தார் பூசாததால், பள்ளங்கள் மயமாக உள்ளது.அனுமதி பெறாமல், சாலையை தோண்டும் தனியார் நபர்கள், நிறுவனங்களுக்கு அபராதம் விதிக்கும் மைசூரு மாநகராட்சி, சாலை பள்ளங்களை சரி செய்வதில், அக்கறை காண்பிக்கவில்லை.

நகரின் இதய பகுதியில் உள்ள சாலைகள், போக்குவரத்து நெருக்கடி அதிகமுள்ள சாலைகளில் உள்ள பள்ளங்களை மூடும்படி, மைசூரு நகர போலீசார், மாநகராட்சியிடம் பலமுறை வேண்டுகோள் விடுத்தும் பயனில்லை என, குற்றச்சாட்டு எழுந்துள்ளது.வேறு வழியின்றி, சில இடங்களில் போலீசாரே, சாலை பள்ளங்களை மூடியுள்ளனர்.

தசரா நெருங்குவதால், சாலை பள்ளங்களை மூடும் பணி, ஆங்காங்கே நடக்கிறது.மைசூரு மாநகராட்சி கவுன்சிலர் ஒருவர் கூறியதாவது:தசரா நெருங்குவதால், 2 கோடி ரூபாய் செலவில் சாலை பள்ளங்களை மூட, மாநகராட்சி திட்டமிட்டுள்ளது. ஆனால் இந்த நிதியுதவி போதாது. இதனால் அரை, குறையாக பணிகளை நிறுத்துவர். அனைத்து வார்டுகளிலும், பள்ளம் ஏற்பட்ட சாலைகளை பழுது பார்க்க வேண்டும்.

ஆண்டு தோறும் தசரா நேரத்தில், சாலை பள்ளங்களை மூட, நடவடிக்கை எடுக்கப்படுகிறது. மற்ற நாட்களில் அலட்சியம் காண்பிக்கின்றனர். சாலை விபத்துகள் அதிகரிக்கிறது. சாலையை பழுது பார்க்கும் பணிகளும், தரமாக இல்லை. பள்ளங்கள் ஏற்பட இதுவே காரணம்.இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X