பொது செய்தி

இந்தியா

'கோவிஷீல்டு'க்கு பிரிட்டன் அங்கீகாரம் தனிமைப்படுத்துதல் தொடரும் என அறிவிப்பு

Added : செப் 22, 2021
Share
Advertisement
புதுடில்லி:'பிரிட்டன் அரசின் புதிய பயண வழிகாட்டுதல்களில், 'கோவிஷீல்டு' தடுப்பூசிக்கு அங்கீகாரம் வழங்கப்பட்டாலும், இரண்டு டோஸ் கோவிஷீல்டு செலுத்திக் கொண்ட இந்திய பயணியர், கட்டாயமாக 10 நாட்கள் தனிமைபடுத்திக் கொள்ள வேண்டும்' என, அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளதுஐரோப்பிய நாடான பிரிட்டனை சேர்ந்த ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் - ஆஸ்ட்ராஜெனகா நிறுவனம் இணைந்து, கோவிஷீல்டு

புதுடில்லி:'பிரிட்டன் அரசின் புதிய பயண வழிகாட்டுதல்களில், 'கோவிஷீல்டு' தடுப்பூசிக்கு அங்கீகாரம் வழங்கப்பட்டாலும், இரண்டு டோஸ் கோவிஷீல்டு செலுத்திக் கொண்ட இந்திய பயணியர், கட்டாயமாக 10 நாட்கள் தனிமைபடுத்திக் கொள்ள வேண்டும்' என, அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது

ஐரோப்பிய நாடான பிரிட்டனை சேர்ந்த ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் - ஆஸ்ட்ராஜெனகா நிறுவனம் இணைந்து, கோவிஷீல்டு தடுப்பூசியை உருவாக்கியது.


10 நாட்கள் தனிமை

இதை, மஹாராஷ்டிராவின் புனேவை சேர்ந்த, சீரம் இந்தியா நிறுவனம் உற்பத்தி செய்து நம் நாட்டில் வினியோகித்து வருகிறது. பிரிட்டன் உள்ளிட்ட பல்வேறு நாடுகளுக்கும் கோவிஷீல்டு தடுப்பூசியை மத்திய அரசு ஏற்றுமதி செய்துள்ளது.

இந்நிலையில், பிரிட்டன் அரசு வெளிநாட்டு பயணியருக்கான பயண வழிகாட்டுதல்களை சமீபத்தில் வெளியிட்டது. அதன் விபரம்:பிரிட்டன் அரசின் அங்கீகரிக்கப்பட்ட தடுப்பூசி பட்டியலில் கோவிஷீல்டு இடம் பெறவில்லை. எனவே இரண்டு, 'டோஸ்' கோவிஷீல்டு தடுப்பூசி போட்ட இந்திய பயணியரை தடுப்பூசி போட்டவராக கருதமுடியாது.

அடுத்த மாதம் 4ம் தேதி முதல் பிரிட்டன் வரும் இந்திய பயணியர் புறப்படுவதற்கு முன் கொரோனா பரிசோதனை செய்திருக்க வேண்டும். பிரிட்டனில் 10 நாட்கள் தனிமைபடுத்திக் கொள்ள வேண்டும். அந்த காலகட்டத்தில் இரண்டு முறை கொரோனா பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்.இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டு இருந்தது.இதற்கு மத்திய அரசு கடும் கண்டனம் தெரிவித்தது.

'இந்நிலை தொடர்ந்தால், இந்தியாவும் பதிலடி நடவடிக்கை குறித்து பரிசீலிக்கும்' என, வெளியுறவுத்துறை செயலர் ஹர்ஷ் வர்தன் ஷ்ரிங்லா தெரிவித்தார்.இதையடுத்து, மாற்றம் செய்யப்பட்ட பயண வழிகாட்டுதல்களை பிரிட்டன் அரசு வெளியிட்டது. அதில், 'சீரம் இந்தியா நிறுவன தயாரிப்பான கோவிஷீல்டு தடுப்பூசிக்கு அங்கீகாரம் வழங்கப்படுகிறது.


சான்றிதழ்



ஆனாலும், இந்திய பயணியருக்கான கட்டுப்பாடுகள் தொடரும்' என, குறிப்பிடப்பட்டுள்ளது. இது குறித்து பிரிட்டன் அரசு அதிகாரிகள் கூறியதாவது:கோவிஷீல்டு தடுப்பூசி குறித்து பிரிட்டன் அரசுக்கு ஆட்சேபணை இல்லை. எனவே தான் தடுப்பூசிக்கான அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.ஆனால், அந்த தடுப்பூசியை செலுத்திக் கொண்டவர்களுக்கு இந்திய அரசு சான்றிதழ் வழங்கும் முறையில் சில பிரச்னைகள் உள்ளன.

இந்திய அரசின் பொது சுகாதார துறையுடன் தொடர்புடைய அமைப்பு வாயிலாக அந்த சான்றிதழ் வழங்கப்பட வேண்டும்.இந்த சிக்கலை களைவது குறித்து இந்திய அதிகாரிகளுடன் பேச்சு நடத்த உள்ளோம். இது களையப்படும் வரை, இரண்டு டோஸ் கோவிஷீல்டு செலுத்திக் கொண்டவர்களும், தடுப்பூசி செலுத்திக்கொள்ளாதவர்களாகவே கருதப்படுவர். அவர்களுக்கும், 10 நாள் தனிமைப்படுத்துதல் உள்ளிட்ட அனைத்து வழிகாட்டுதல்களும் பொருந்தும்இவ்வாறு அவர்கள் கூறினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X