மேம்பாலத்தில் நடனம் ஆடியவருக்கு அபராதம்

Added : செப் 22, 2021 | கருத்துகள் (5)
Share
Advertisement
கோல்கட்டா:மேற்கு வங்கத்தில், மேம்பாலத்தில் காரை நிறுத்தி விட்டு பாலத்தின் நடுவில் நடனம் ஆடியவருக்கு, போலீசார் அபராத 'நோட்டீஸ்' அனுப்பிஉள்ளனர்.மேற்கு வங்கத்தில் முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையில் திரிணமுல் காங்., ஆட்சி நடக்கிறது. இங்கு தலைநகர் கோல்கட்டாவில் உள்ள 'மா' மேம்பாலத்தில், ஒருவர் காரை நிறுத்தி விட்டு, அங்கேயே இந்தி பாடலுக்கு நடனமாடினார். நேரடியாக
 மேம்பாலத்தில் நடனம் ஆடியவருக்கு அபராதம்

கோல்கட்டா:மேற்கு வங்கத்தில், மேம்பாலத்தில் காரை நிறுத்தி விட்டு பாலத்தின் நடுவில் நடனம் ஆடியவருக்கு, போலீசார் அபராத 'நோட்டீஸ்' அனுப்பிஉள்ளனர்.

மேற்கு வங்கத்தில் முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையில் திரிணமுல் காங்., ஆட்சி நடக்கிறது. இங்கு தலைநகர் கோல்கட்டாவில் உள்ள 'மா' மேம்பாலத்தில், ஒருவர் காரை நிறுத்தி விட்டு, அங்கேயே இந்தி பாடலுக்கு நடனமாடினார். நேரடியாக 'பேஸ்புக்'கில் பதிவேற்றப்பட்ட இந்த நடனத்தை, 42 லட்சம் பேர் பார்த்துள்ளனர்.

இந்நிலையில், கட்டுப்பாட்டு அறையில் இருந்து, இந்த நடுவீதி நடனத்தை பார்த்து அதிர்ச்சி அடைந்த போலீசார், காரின் பதிவு எண் வாயிலாக உரிமையாளர் விபரத்தை தேடிய போது, அவர் சமூக வலைதளத்தில் புகழ் பெற்ற சாண்டி ஷா என்பது தெரியவந்தது. இதையடுத்து, போக்குவரத்து நெரிசல் மிக்க பகுதியில் காரை நிறுத்தியதுடன், நடுவீதியில் நடனம் ஆடிய சாண்டி ஷா, படம் பிடித்த குழுவினர் ஆகியோருக்கு போலீசார் அபராத நோட்டீஸ் அனுப்பியுள்ளனர்.

பேஸ்புக்கில் சாண்டி ஷாவின் ஆட்டத்தை பலர் ரசித்தாலும், 'போக்குவரத்து விதிகளை மீறிய குற்றத்திற்காக அவரை கடுமையாக தண்டிக்க வேண்டும்' என பலர் கருத்து தெரிவித்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Raj Kamal - Thiruvallur,இந்தியா
27-செப்-202115:53:18 IST Report Abuse
Raj Kamal மேற்கு வங்கத்தில் முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையில் திரிணமுல் காங்., ஆட்சி நடக்கிறது. - இந்த செய்திக்கும் மம்தா ஆட்சிக்கும் ஏதாவது தொடர்பு உள்ளதா?
Rate this:
Cancel
திரு.திருராம் - திரு.திருபுரம்,இந்தியா
24-செப்-202116:20:35 IST Report Abuse
திரு.திருராம் பாலியல் மாற்றாளி போல தெரிகிறதே?
Rate this:
Cancel
DARMHAR - Los Angeles,யூ.எஸ்.ஏ
23-செப்-202123:14:22 IST Report Abuse
DARMHAR விநாச காலே விபரீத புத்தி இப்படித்தான் இருக்கும்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X