மைசூரு நகரில் சரஸ்வதி தியேட்டர் மூடல்

Added : செப் 22, 2021
Share
Advertisement
பெங்களூரு:மைசூரில் திரையரங்குகள் தொடர்ந்து மூடப்படுகின்றன. தற்போது 'சரஸ்வதி' திரையரங்கு மூடப்பட்டுள்ளது.கன்னட திரையுலகுக்கு விஷ்ணுவர்த்தன், மூத்த நடிகர் அஸ்வத், தர்ஷன், யஷ் உட்பட, பலரை அளித்துள்ள மைசூரில், வருமானம் இல்லாதததால் ஒவ்வொரு திரையரங்காக மூடப்படுகிறது. இது, கன்னட ரசிகர்களுக்கு வருத்தமளித்துள்ளது.கொரோனா மற்றும் ஊரடங்கால், ஒன்றரை ஆண்டுகளாக
மைசூரு நகரில் சரஸ்வதி தியேட்டர்  மூடல்

பெங்களூரு:மைசூரில் திரையரங்குகள் தொடர்ந்து மூடப்படுகின்றன. தற்போது 'சரஸ்வதி' திரையரங்கு மூடப்பட்டுள்ளது.

கன்னட திரையுலகுக்கு விஷ்ணுவர்த்தன், மூத்த நடிகர் அஸ்வத், தர்ஷன், யஷ் உட்பட, பலரை அளித்துள்ள மைசூரில், வருமானம் இல்லாதததால் ஒவ்வொரு திரையரங்காக மூடப்படுகிறது. இது, கன்னட ரசிகர்களுக்கு வருத்தமளித்துள்ளது.

கொரோனா மற்றும் ஊரடங்கால், ஒன்றரை ஆண்டுகளாக திரையரங்குகள், சரியாக திறக்கப்பட வில்லை. வருவாய் இல்லாததால், ஊழியர்களுக்கு ஊதியம் வழங்கவும் முடியவில்லை. சமீபத்தில் மூடப்பட்ட தியேட்டர்களில் ஒன்றான சரஸ்வதி, 1990ல் துவங்கப்பட்டது. கன்னட படங்கள் மட்டுமே இங்கு திரையிடப்பட்டுள்ளது. பெரும்பாலும் புனித் ராஜ்குமார் படங்கள் மட்டுமே திரையிடப்படும். இங்கு கடைசியாக திரையிடப்பட்ட படம், ராபர்ட்.

மைசூரில் 16 திரையரங்குகள் இருந்தன. கொரோனாவுக்கு முன், ரனஜித், ஆப்ரா, ஸ்டெர்லிங், ஷாலிமார் திரையரங்குகள் மூடப்பட்டன. கொரோனாவுக்கு பின், நாகராஜ், சாந்தலா, லட்சுமி, சரஸ்வதி திரையரங்குகள் மூடப்பட்டன. தற்போது எட்டு திரையரங்குகள் மட்டுமே உள்ளது.

மைசூரில் மட்டுமின்றி, மாநிலம் முழுதும் திரையரங்குகளின் சூழ்நிலை இதே தான். 'டிஜிட்டல்' தொழில்நுட்பம் வந்த பின், மக்களுக்கு திரையரங்குக்கு சென்று படம் பார்க்கும் ஆர்வம் குறைந்து உள்ளது. வீட்டிலேயே படம் பார்க்க விரும்புகின்றனர். இது திரையரங்குகளை நஷ்டத்தில் தள்ளியுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X