சித்துவுக்கு எதிராக வேட்பாளர் அமரீந்தர் சிங் சூளுரை| Dinamalar

சித்துவுக்கு எதிராக வேட்பாளர் அமரீந்தர் சிங் சூளுரை

Updated : செப் 24, 2021 | Added : செப் 22, 2021 | கருத்துகள் (10)
Share
சண்டிகர் :“ராகுல் மற்றும் பிரியங்கா இருவரும் அரசியல் அனுபவம் இல்லாதவர்கள். வரவிருக்கும் பஞ்சாப் சட்டசபை தேர்தலில் சித்துவுக்கு எதிராக வலுவான வேட்பாளரை நிறுத்தி அவரை தோற்கடிப்பேன்,” என, பஞ்சாப் மாநில முன்னாள் முதல்வர் அமரீந்தர் சிங் கூறினார்.பஞ்சாப் மாநிலத்தில் காங்., ஆட்சி நடக்கிறது. இங்கு முதல்வராக இருந்த அமரீந்தர் சிங்குக்கும், மாநில காங்., தலைவரான நவஜோத் சிங்
சித்து, எதிர், வேட்பாளர் அமரீந்தர் சிங், சூளுரை

சண்டிகர் :“ராகுல் மற்றும் பிரியங்கா இருவரும் அரசியல் அனுபவம் இல்லாதவர்கள். வரவிருக்கும் பஞ்சாப் சட்டசபை தேர்தலில் சித்துவுக்கு எதிராக வலுவான வேட்பாளரை நிறுத்தி அவரை தோற்கடிப்பேன்,” என, பஞ்சாப் மாநில முன்னாள் முதல்வர் அமரீந்தர் சிங் கூறினார்.
பஞ்சாப் மாநிலத்தில் காங்., ஆட்சி நடக்கிறது. இங்கு முதல்வராக இருந்த அமரீந்தர் சிங்குக்கும், மாநில காங்., தலைவரான நவஜோத் சிங் சித்துவுக்கும் இடையே பூசல் நிலவியது. காங்., மேலிடம் கொடுத்த அழுத்தம் காரணமாக, அமரீந்தர் சிங் சமீபத்தில் முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார். சித்து ஆதரவாளரான சரண்ஜித் சிங் சன்னி புதிய முதல்வராக பொறுப்பேற்றார்.
இந்நிலையில், அமரீந்தர் சிங் நிருபர்களிடம் நேற்று கூறியதாவது:ராகுல், பிரியங்கா இருவருமே அரசியல் அனுபவம் இல்லாதவர்கள். சித்து ஒரு தேசவிரோதி, ஆபத்தானவர். அவரிடம் இருந்து நாட்டை காப்பாற்ற கடுமையாக போராடுவேன். அடுத்த ஆண்டு நடக்கும் பஞ்சாப் சட்டசபை தேர்தலில் சித்துவுக்கு எதிராக வலுவான வேட்பாளர் ஒருவரை நிறுத்தி அவரை தோற்கடிக்கச் செய்வேன். அது வரை என் போராட்டம் தொடரும்.இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X