பயங்கரவாதிகளுக்கு உதவிய 6 அரசு அதிகாரிகள் பணி நீக்கம்

Added : செப் 22, 2021
Share
Advertisement
ஸ்ரீநகர்:ஜம்மு - காஷ்மீரில் பயங்கரவாதிகளுக்கு உதவி வரும் அரசு அதிகாரிகள் களையெடுக்கப்பட்டு வருகின்றனர்.இந்தவகையில், அரசு கல்லுாரி ஆசிரியர்கள் அப்துல் ஹமீத் வானி, லியாகத் அலி கக்ரூ, இளநிலை உதவியாளர் முகமது ரபி பட், வனத் துறை அதிகாரி தாரிக் மகமூத் கோலி, போலீஸ் 'கான்ஸ்டபிள்'கள் ஷவுகத் அகமது கான், ஜாபர் உசேன் பட் ஆகியோர் பயங்கரவாதிகளுக்கு உதவிய குற்றச்சாட்டில் பணி

ஸ்ரீநகர்:ஜம்மு - காஷ்மீரில் பயங்கரவாதிகளுக்கு உதவி வரும் அரசு அதிகாரிகள் களையெடுக்கப்பட்டு வருகின்றனர்.

இந்தவகையில், அரசு கல்லுாரி ஆசிரியர்கள் அப்துல் ஹமீத் வானி, லியாகத் அலி கக்ரூ, இளநிலை உதவியாளர் முகமது ரபி பட், வனத் துறை அதிகாரி தாரிக் மகமூத் கோலி, போலீஸ் 'கான்ஸ்டபிள்'கள் ஷவுகத் அகமது கான், ஜாபர் உசேன் பட் ஆகியோர் பயங்கரவாதிகளுக்கு உதவிய குற்றச்சாட்டில் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் மீது தேசிய புலனாய்வு அமைப்பு வழக்கு பதிவு செய்துள்ளது.

'அவர்கள் மீதான குற்றச்சாட்டுகளுக்கு ஆதாரம் உள்ளதால் பணி நீக்கம் செய்யலாம்' என, ஜம்மு - காஷ்மீர் நிர்வாகக் குழு அளித்த பரிந்துரையின் பேரில், இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.அப்துல் ஹமீது வானி, ஆசிரியர் பணியில் சேரும் முன் 'அல்லா டைகர்ஸ்' என்ற பயங்கரவாத அமைப்பின் மாவட்ட தளபதியாக இருந்துள்ளார்.

இவர், தடை செய்யப்பட்ட ஜமாத் - இ - இஸ்லாமி பயங்கரவாத அமைப்பின் உதவியால், எந்தவித தேர்வுமின்றி அரசு பணியில் சேர்ந்துள்ளார். லியாகத் அலி கக்ரூ, பயங்கரவாத பயிற்சி பெற்றதற்காக 2001ல் கைது செய்யப்பட்டவர். இவர் வீட்டில் இருந்து வெடிபொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. தாரிக் முகமது கோரி மீது, பயங்கரவாதிகளுக்கு ஆயுதங்கள், வெடி மருந்துகள், கள்ள நோட்டு சப்ளைஉள்ளிட்ட குற்றச்சாட்டுகள் உள்ளன.

எம்.எல்.சி., வீட்டில் துப்பாக்கிகளை திருடியதாக போலீஸ் கான்ஸ்டபில் ஷவுகத் அகமது கான் மீது வழக்கு உள்ளது. ஹிஸ்புல் முஜாகிதீன் பயங்கரவாதிகள் பாதுகாப்பாக வாகனங்களில் செல்ல ஏற்பாடு செய்த குற்றச்சாட்டில், ஜாபர் உசேன் பட், முகமது ரபி பட் ஆகியோர் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் அனைவரும், அரசு பணிகளில் இருந்தபடி பயங்கரவாத அமைப்புகளுக்கு தொடர்ந்து உதவி வருவதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X