தாக்குதலுக்கு வந்தவராக கருதி போலீஸ்காரர் சுட்டுக்கொலை

Added : செப் 22, 2021
Share
Advertisement
ஸ்ரீநகர்:ஜம்மு - காஷ்மீரில், கோவில் பாதுகாப்பு பணிக்கு வந்த போலீஸ்காரரை, தாக்குதல் நடத்த வந்தவர் என தவறாக கருதி, மற்றொரு போலீஸ்காரர் சுட்டுக் கொன்றார்.ஜம்மு - காஷ்மீரின் குப்வாரா மாவட்டம் ஹந்த்வாரா நகரில் உள்ள கோவிலில் பாதுகாப்பு பணியில் இருந்த போலீஸ்காரர் அஜய் தர். போலீஸ் ஸ்டேஷனில் இருந்து அதிகாலை 2:00 மணி அளவில் கோவிலுக்கு வந்த அஜய், காதில் 'மொபைல் போன்' இணைப்புடன்

ஸ்ரீநகர்:ஜம்மு - காஷ்மீரில், கோவில் பாதுகாப்பு பணிக்கு வந்த போலீஸ்காரரை, தாக்குதல் நடத்த வந்தவர் என தவறாக கருதி, மற்றொரு போலீஸ்காரர் சுட்டுக் கொன்றார்.

ஜம்மு - காஷ்மீரின் குப்வாரா மாவட்டம் ஹந்த்வாரா நகரில் உள்ள கோவிலில் பாதுகாப்பு பணியில் இருந்த போலீஸ்காரர் அஜய் தர். போலீஸ் ஸ்டேஷனில் இருந்து அதிகாலை 2:00 மணி அளவில் கோவிலுக்கு வந்த அஜய், காதில் 'மொபைல் போன்' இணைப்புடன் 'ஹெட்செட்' பொருத்தி இருந்தார்.

கோவில் கதவை அவர் தொடர்ந்து தட்டி உள்ளார். கோவிலுக்குள் இருந்த மற்றொரு போலீஸ்காரர் யார் எனக் கேட்டுள்ளார். காதுகளில் ஹெட்செட் இருந்ததால் அஜய் பதில் அளிக்காமல் தொடர்ந்து கதவை தட்டினார். இதனால், கோவிலில் தாக்குதல் நடத்த வந்தவர் என நினைத்து நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில், அஜய் தர் பரிதாபமாக பலியானார்.

இது குறித்து, போலீஸ் ஐ.ஜி., விஜய் குமார் கூறியதாவது:அஜய் தர், நள்ளிரவில் தான் யார் எனக் கூறாமல் கதவுகளை தட்டியுள்ளார். இதனால் தாக்குதல் நடத்த வந்துள்ளதாக கருதிய, பணியில் இருந்த போலீஸ்காரர், முதலில் வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டுள்ளார். அப்போதும் அஜய் தர் பதில் அளிக்காமல் கதவுகளை தட்டியதால், அவர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டு உள்ளது. இது எதிர்பாராமல் நடந்தது என்றாலும் விசாரணை தொடர்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X