மைசூரு: வணிக வரி இணை கமிஷனர் அலுவலகத்தில் வெடிகுண்டு புரளி

Added : செப் 22, 2021
Share
Advertisement
மைசூரு:மைசூரில் உள்ள வணிக வரி இணை கமிஷனர் அலுவலகத்தில் வெடிகுண்டு வைத்திருப்பதாக வந்த புரளியால் பதற்றம் நிலவியது.மர்ம கடிதம் மைசூரு லட்சுமிபுரத்தில் உள்ள வணிக வரி அதிகாரி ஒருவருக்கு மர்ம கடிதம் வந்தது. அதில், மைசூரு சாம்ராஜ்புரா அடுத்த சுப்பராயணகெரேவின் கிருஷ்ண விலாஷ் சாலையில் உள்ள வணிக வரி இணை கமிஷனர் அலுவலகத்தில் வெடிகுண்டு வைத்திருப்பதாக
மைசூரு: வணிக வரி இணை கமிஷனர் அலுவலகத்தில் வெடிகுண்டு புரளி

மைசூரு:மைசூரில் உள்ள வணிக வரி இணை கமிஷனர் அலுவலகத்தில் வெடிகுண்டு வைத்திருப்பதாக வந்த புரளியால் பதற்றம் நிலவியது.

மர்ம கடிதம்

மைசூரு லட்சுமிபுரத்தில் உள்ள வணிக வரி அதிகாரி ஒருவருக்கு மர்ம கடிதம் வந்தது. அதில், மைசூரு சாம்ராஜ்புரா அடுத்த சுப்பராயணகெரேவின் கிருஷ்ண விலாஷ் சாலையில் உள்ள வணிக வரி இணை கமிஷனர் அலுவலகத்தில் வெடிகுண்டு வைத்திருப்பதாக குறிப்பிட்டிருந்தது.இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர், உடனே போலீசாருக்கு தகவல் கொடுத்தார்.

உடனே போலீஸ் மோப்ப நாய்களுடன், வெடிகுண்டு செயலிழப்பு நிபுணர்கள் அங்கு சென்றனர். அலுவலகத்தில் இருந்தவர்களை வெளியே அனுப்பிவிட்டு, ஒவ்வொரு பகுதியையும் முழுமையாக சோதனை செய்தனர்.போலீசார் அதிகமாக இருப்பதை கண்டு நுாற்றுக்கணக்கான மக்கள் கூடினர். அவர்களை போலீசார் விரட்டினர்.முழு அலுவலகத்தையும் சோதனை செய்தும், எங்கும் வெடிகுண்டு கிடைக்கவில்லை. இதன் பின், தான் வெறும் புரளி என்பது தெரிய வந்தது.வணிக வரி அலுவலகம், இரண்டு மணி நேரத்துக்கும் அதிகமான பரபரப்பாக காணப்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X