பொது செய்தி

இந்தியா

கிரும்பிகல் கட்டடம் அபிவிருத்தி பணி முடிவு திறப்பு விழாவிற்கு தயார்

Added : செப் 22, 2021
Share
Advertisement
பெங்களூரு:பெங்களூரின் லால்பாக் பூங்காவில், 200 ஆண்டுகள் பழமையான கிரும்பிகல் கட்டடத்தை, அபிவிருத்தி செய்யும் பணிகள் முடிந்து, திறப்பு விழாவுக்கு தயார் நிலையில் உள்ளது. பெங்களூரு லால்பாக் பூங்காவில் உள்ள, கிரும்பிகல் கட்டடம் புராதனமானது. ஜெர்மனியை சேர்ந்த தாவர விஞ்ஞானியும், தோட்ட வடிவமைப்பாளருமான குஸ்தாவ் ஹர்மன் கிரும்பிகல், 1908ல் மைசூரு அரசின் தோட்டம், பூங்கா
கிரும்பிகல் கட்டடம் அபிவிருத்தி பணி முடிவு திறப்பு விழாவிற்கு தயார்

பெங்களூரு:பெங்களூரின் லால்பாக் பூங்காவில், 200 ஆண்டுகள் பழமையான கிரும்பிகல் கட்டடத்தை, அபிவிருத்தி செய்யும் பணிகள் முடிந்து, திறப்பு விழாவுக்கு தயார் நிலையில் உள்ளது.

பெங்களூரு லால்பாக் பூங்காவில் உள்ள, கிரும்பிகல் கட்டடம் புராதனமானது. ஜெர்மனியை சேர்ந்த தாவர விஞ்ஞானியும், தோட்ட வடிவமைப்பாளருமான குஸ்தாவ் ஹர்மன் கிரும்பிகல், 1908ல் மைசூரு அரசின் தோட்டம், பூங்கா பொறுப்பாளராக இருந்தார். 1920ல் தோட்டக்கலைத் துறை இயக்குனரான இவர், 1932 வரை இப்பதவியில் இருந்தார்.கடந்த, 1956ல் பெங்களூரில் காலமானார்.

1990ல் லால்பாகின் கண்ணாடி மாளிகையின் நுாற்றாண்டு நிகழ்ச்சியில், ஓய்வுபெற்ற அதிகாரிகளை நினைவு கூறும் வகையில், பூங்காவிலிருந்த வரலாற்று பிரசித்தி பெற்ற, சில கட்டடங்களுக்கு, அதிகாரிகளின் பெயர் சூட்டப்பட்டது. அந்த வகையில், தோட்டக்கலைத்துறை மாநாடு ஹாலுக்கு, கிரும்பிகல் என, பெயர் சூட்டப்பட்டது. இக்கட்டடம் புதுப்பிக்கப்பட்டு, திறப்பு விழாவுக்கு தயாராக உள்ளது.

தோட்டக்கலைத்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:கிரும்பிகல் ஹால், மிகவும் புராதனமானது. இக்கட்டடம் 98 லட்சம் ரூபாய் செலவில், கட்டடத்தை புதுப்பிக்கும் பணிகள், இரண்டு ஆண்டுகளாக நடந்தன. பணிகள் முடிந்துள்ளதால், திறப்பு விழாவுக்கு தேதி நிர்ணயிக்கப்படும்.கட்டடம் பழமை மாறாமல், 150 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்டதை போன்ற, அதே பாணியில் இப்போதும் கட்டப்பட்டுள்ளது.

மழை, காற்றை தடுக்கக்கூடிய வகையில் கட்டப்பட்டுள்ளது.ஆரம்ப நாட்களில் கிரும்பிகல் ஹாலில், தோட்டக்கலைத்துறை அதிகாரிகள், மாணவர்கள், பொது மக்களுக்கு தோட்டக்கலை குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது. இப்போதும் அதே நோக்கத்துக்கு, பயன்படுத்தப்படும். துறை கட்டுப்பாட்டில் உள்ள பூங்காக்கள் குறித்து, பொது மக்களுக்கு தகவல் தெரிவிக்கப்படும். இதற்காக திரையரங்கு போன்று, சிறிய திரை பொருத்தப்பட்டுள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X