அரசியல் செய்தி

தமிழ்நாடு

தமிழகத்தின் பொருளாதாரம் ரூ.70 லட்சம் கோடியை எட்ட இலக்கு

Updated : செப் 24, 2021 | Added : செப் 22, 2021 | கருத்துகள் (28+ 134)
Share
Advertisement
சென்னை : ''தமிழகத்தின் பொருளாதாரம், 2030ம் ஆண்டுக்குள் 70 லட்சம் கோடி ரூபாயை எட்ட வேண்டும் என்பது இலக்கு. இதை அடைய, பொது மற்றும் தனியார் துறைகளில் உள்ள நிறுவனங்கள் ஒன்றிணைந்து பணியாற்ற வேண்டும்,'' என, முதல்வர் ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்தார்.சென்னை கலைவாணர் அரங்கில், 'ஏற்றுமதியில் ஏற்றம் - முன்னிலையில் தமிழ்நாடு' என்ற தலைப்பில், ஏற்றுமதி மாநாடு நடந்தது. மாநாட்டை
தமிழகம்,பொருளாதாரம் ரூ.70 லட்சம் கோடி, இலக்கு

சென்னை : ''தமிழகத்தின் பொருளாதாரம், 2030ம் ஆண்டுக்குள் 70 லட்சம் கோடி ரூபாயை எட்ட வேண்டும் என்பது இலக்கு. இதை அடைய, பொது மற்றும் தனியார் துறைகளில் உள்ள நிறுவனங்கள் ஒன்றிணைந்து பணியாற்ற வேண்டும்,'' என, முதல்வர் ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்தார்.

சென்னை கலைவாணர் அரங்கில், 'ஏற்றுமதியில் ஏற்றம் - முன்னிலையில் தமிழ்நாடு' என்ற தலைப்பில், ஏற்றுமதி மாநாடு நடந்தது. மாநாட்டை துவக்கி வைத்து, முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது:தமிழகம், 1.93 லட்சம் கோடி ரூபாய் ஏற்றுமதியுடன், இந்தியாவில் மூன்றாவது பெரிய மாநிலமாக உள்ளது.

அகில இந்திய அளவிலான ஏற்றுமதியில், தமிழகத்தின் பங்களிப்பு 8.97 சதவீதம். மோட்டார் வாகன உற்பத்தியில், தமிழகம் முன்னிலை வகித்து வருகிறது. ஏற்றுமதித் திறனை மேம்படுத்த, தமிழக அரசு பல நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. ஏற்றுமதியை மேம்படுத்த, தலைமைச் செயலர் தலைமையில், மாநில ஏற்றுமதி மேம்பாட்டுக் குழு அமைக்கப்பட உள்ளது.
தென் தமிழகத்தின் தொழில் வளர்ச்சிக்கு மேலும் உத்வேகம் அளிக்க, துாத்துக்குடியில் ஏற்றுமதியை மையமாகக் கொண்ட 'சர்வதேச அறைகலன் பூங்கா' இந்தியாவிலே முதன் முறையாக, தமிழக அரசால் அமைக்கப்பட்டு வருகிறது.


வழிகாட்டிகுறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கான ஏற்றுமதி திட்டங்களை கண்காணிக்க, ஒரு பிரத்யேக அமைப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது. ஏற்றுமதிகள் தொடர்பான இடர்ப்பாடுகளை களைதல், அனுமதி பெற்றுத் தருதல் ஆகிய பணிகளை மேற்கொள்ள, வழிகாட்டி நிறுவனத்தில் ஏற்றுமதி அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது.ஏற்றுமதியாளர்களுக்கு தேவையான, உலகத் தரம் வாய்ந்த உள்கட்டமைப்பு வசதிகளுடன், திருவள்ளூர் மாவட்டம், மாநல்லுாரில் 6,000 ஏக்கர்; துாத்துக்குடியில், 5,000 ஏக்கர் பரப்பளவில், 'சிப்காட்' நிறுவனம் வழியாக இரண்டு பொருளாதார வேலைவாய்ப்பு பகுதிகளை உருவாக்க, அரசு திட்டமிட்டுள்ளது.

திருப்பூர், கரூர், மதுரை, ஆம்பூர், துாத்துக்குடி, பொள்ளாச்சி, காஞ்சிபுரம், சென்னை, கோவை, ஓசூர் ஆகிய, 10 ஏற்றுமதி மையங்கள் மேம்படுத்தப்பட உள்ளன. ஏற்றுமதியாளர்கள் மதிப்பு கூட்டல் பொருட்கள் உற்பத்தி செய்வதை ஊக்குவிக்க, தொகுப்பு சலுகைகள் வழங்க ஒரு திட்டம் வடிவமைக்கப்படும்.காவிரி டெல்டா பகுதியில், வேளாண் வளர்ச்சியை ஊக்குவிக்க, திருச்சி - நாகப்பட்டினம் மாவட்டத்திற்கு இடையிலான பகுதி, வேளாண் தொழிற்சாலைகளுக்கான பெருவழித் தடமாக அறிவிக்கப்பட்டுள்ளது. தேனி, மணப்பாறை, திண்டிவனம் ஆகிய இடங்களில், மூன்று உணவுப் பூங்காக்கள் ஏற்படுத்தப்பட உள்ளன.

வேளாண் ஏற்றுமதி சேவை மையம் உருவாக்க, அரசு திட்டமிட்டுள்ளது. உலகத்தின் மூலை முடுக்குகளில் எல்லாம், 'மேட் இன் தமிழ்நாடு' என்ற, குரல் ஒலிக்க வேண்டும். அந்த லட்சியத்தை நோக்கியே, எங்களின் பயணம் அமைந்திடும்.வரும் 2030க்குள், 70 லட்சம் கோடி ரூபாய் பொருளாதாரத்தை, தமிழகம் அடைய இலக்கு நிர்ணயித்துள்ளோம். தற்போது, 1.82 லட்சம் கோடி ரூபாயாக இருக்கும், மாநிலத்தின் ஏற்றுமதி, 2030க்குள், ஏழு லட்சம் கோடி ரூபாயாக உயர வேண்டும்.இந்த லட்சியத்தை அடைய, பொது மற்றும் தனியார் துறைகளில் உள்ள நிறுவனங்கள் ஒன்றிணைந்து பணியாற்ற வேண்டும்.இவ்வாறு முதல்வர் பேசினார்.

மாநாட்டில், அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, அன்பரசன், தலைமைச் செயலர் இறையன்பு, மத்திய அரசின் வணிகத் துறை கூடுதல் செயலர் சஞ்சய் சத்தா, தமிழக தொழில் துறை முதன்மை செயலர் முருகானந்தம் பங்கேற்றனர்.


ஏற்றுமதி கொள்கை!தமிழ்நாடு ஏற்றுமதி மேம்பாட்டு கொள்கை மற்றும் குறு,சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களுக்கான, ஏற்றுமதியாளர்களின் கையேடு ஆகியவற்றை, முதல்வர் நேற்று வெளியிட்டார்.


ஏற்றுமதி மேம்பாட்டு கொள்கையின் சிறப்பம்சங்கள்:* வரும் 2030ம் ஆண்டுக்குள், 7 லட்சம் கோடி ரூபாயாக, ஏற்றுமதியை உயர்த்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதற்காக, ஏற்றுமதியை மேம்படுத்துதல், ஏற்றுமதி பன்முகப்படுத்தல் என, இரு அணுகுமுறைகள் கடைப்பிடிக்கப்படும்

* ஏற்றுமதி தொடர்பான பொதுவான உள்கட்டமைப்பு வசதிகள் வலுப்படுத்தப்படும். இதற்காக, மாநிலத்தில், 10 ஏற்றுமதி பகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. ஒரு ஏற்றுமதி மையத்திற்கு, தலா 10 கோடி ரூபாய் என்ற அளவில், 25 சதவீதம் மானியம் அளிக்கப்படும்.
இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளன.


நிலம் ஒதுக்கீடு ஆணைதிருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி அருகில் உள்ள வாயலுாரில், 240 ஏக்கர் பரப்பளவில், பாலிமர் தொழிற்சாலைகளுக்கு என பிரத்யேகமாக, ஒரு தொழிற்பூங்கா அமைக்கப்பட்டுள்ளது.
இந்த பூங்காவில், முதல் இரண்டு நிறுவனங்களுக்கு, நிலம் ஒதுக்கீடு ஆணைகளை, முதல்வர் ஸ்டாலின் வழங்கினார்.'காட்டன் கார்ப்பரேஷன் ஆப் இந்தியா' நிறுவனம், தமிழகத்தில் பஞ்சுக் கிடங்குகள் அமைக்க முன்வந்துள்ளது. இதற்கான ஆணைகளை, அதன் தலைவர் வழங்கினார்.


ஏற்றுமதி கண்காட்சி!சென்னை, கலைவாணர் அரங்கில், ஏற்றுமதி கண்காட்சி நடந்தது. இதை முதல்வர் திறந்து வைத்தார். கண்காட்சியில், 21 ஏற்றுமதி நிறுவனங்கள், ஏற்றுமதி மேம்பாட்டு நிறுவனங்கள், அரசு நிறுவனங்கள் பங்கேற்றன.

Advertisement
வாசகர் கருத்து (28+ 134)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
unmaitamil - seoul,தென் கொரியா
24-செப்-202119:54:50 IST Report Abuse
unmaitamil அடுத்த படஜெட் போடா வழிதெரியால. இதுல 70,லட்சம் கோடி பத்தி பீத்தல். கூரைஏறி கோழி பிடிக்க முடியாதவன், வானம் ஏறி வைகுண்டம் போக ஆசைப்பட்ட கதைபோல் இருக்கு. முட்டாப்பயலுக .
Rate this:
Cancel
Saravanan - Abudhabi,ஐக்கிய அரபு நாடுகள்
23-செப்-202123:28:35 IST Report Abuse
Saravanan எங்களோட மிக பெரிய mad இன் தமிழ்நாடு நீங்க தான் அய்யா, அதிலும் நீங்க திராவிடம் mad
Rate this:
Cancel
S. Narayanan - Chennai,இந்தியா
23-செப்-202123:13:46 IST Report Abuse
S. Narayanan உலகளாவிய டெண்டர் விட்டு செங்கல் பட்டில் தடுப்பூசி தொழில் சாலை தொடங்கி ஆச்சு. இப்போ 70 லட்சம் கோடி செலவில் புதிய தொழில் துவங்க பேச்சு வார்த்தை மட்டும் தான். அமைச்சர்களுக்கு கொடுக்க வேண்டியதை கொடுத்து விட்டாள் அவர்கள் எப்படி சாமர்த்தியம் ஆக தொழில் ஆரம்பம் செய்வது போல காட்டி நஷ்ட கணக்கு காண்பித்து விடியல் பெறலாம்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X