பொது செய்தி

இந்தியா

விரைவில் வெள்ள பாதிப்பு நிவாரணம் : வருவாய்துறை அமைச்சர் தகவல்

Added : செப் 22, 2021
Share
Advertisement
பெங்களூரு:"வெள்ள பாதிப்பு மக்களுக்கு நிவாரணம் வழங்க, ஒரு வாரத்துக்குள் 35 கோடி ரூபாய் வழங்கப்படும்," என வருவாய்த்துறை அமைச்சர் அசோக் தெரிவித்தார்.சட்ட மேலவையின் கேள்வி நேரத்தில், உறுப்பினர்களின் கேள்விக்கு பதிலளித்து, அமைச்சர் அசோக் கூறியதாவது:மூன்று ஆண்டுகளாக, மாநிலம் நிரந்தரமாக வெள்ள பாதிப்பில் சிக்கியுள்ளது. வெள்ள நிவாரண பணிகளுக்கு, 765.84 கோடி ரூபாய் நிதியுதவி

பெங்களூரு:"வெள்ள பாதிப்பு மக்களுக்கு நிவாரணம் வழங்க, ஒரு வாரத்துக்குள் 35 கோடி ரூபாய் வழங்கப்படும்," என வருவாய்த்துறை அமைச்சர் அசோக் தெரிவித்தார்.

சட்ட மேலவையின் கேள்வி நேரத்தில், உறுப்பினர்களின் கேள்விக்கு பதிலளித்து, அமைச்சர் அசோக் கூறியதாவது:மூன்று ஆண்டுகளாக, மாநிலம் நிரந்தரமாக வெள்ள பாதிப்பில் சிக்கியுள்ளது. வெள்ள நிவாரண பணிகளுக்கு, 765.84 கோடி ரூபாய் நிதியுதவி வழங்கும்படி, ஆகஸ்ட் 21ல், மத்திய அரசிடம் கோரிக்கை அனுப்பப்பட்டது.

அதன்பின் கலபுரகி, பீதர் மாவட்டங்களில், வெள்ள பாதிப்பு ஏற்பட்டதால், 841.57 கோடி ரூபாய் நிதியுதவி கேட்டு, செப்டம்பர் 18ல், கோரிக்கை விடுக்கப்பட்டது. மத்திய அரசின் ஏழு பேர் கொண்ட குழுக்கள், இரண்டு முறை கர்நாடகாவுக்கு வந்து, ஆய்வு செய்தன. ஆனால் இதுவரை நிதியுதவி வழங்கவில்லை.

மத்திய அரசின் நிதியுதவிக்காக காத்திராமல், 154.65 கோடி ரூபாய் செலவில், அவசர பணிகளை மேற்கொண்டது. எதிர்வரும் நாட்களில், மேலும் 35 கோடி ரூபாய் வழங்கப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X