2,479 காண்டாமிருகத்தின் கொம்புகள் தீ வைத்து எரிப்பு

Added : செப் 22, 2021
Share
Advertisement
போகாகட்:அசாமில், கடத்தலில் பிடிபட்ட காண்டாமிருகங்களின், 2,479 கொம்புகள் தீ வைத்து எரிக்கப்பட்டன.அசாமில் முதல்வர் ஹிமந்த பிஸ்வா சர்மா தலைமையில் பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இங்குள்ள கஜூரங்கா உயிரியல் பூங்கா, ஒற்றைக் கொம்பு காண்டாமிருகங்களுக்கு புகழ் பெற்றது. காண்டாமிருக கொம்பில் மருத்துவ குணம் உள்ளதாக கூறப்படுவதால், அவற்றை கொன்று கொம்புகள் கடத்தப்படுகின்றன. இவ்வாறு
 2,479 காண்டாமிருகத்தின் கொம்புகள் தீ வைத்து எரிப்பு

போகாகட்:அசாமில், கடத்தலில் பிடிபட்ட காண்டாமிருகங்களின், 2,479 கொம்புகள் தீ வைத்து எரிக்கப்பட்டன.

அசாமில் முதல்வர் ஹிமந்த பிஸ்வா சர்மா தலைமையில் பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இங்குள்ள கஜூரங்கா உயிரியல் பூங்கா, ஒற்றைக் கொம்பு காண்டாமிருகங்களுக்கு புகழ் பெற்றது. காண்டாமிருக கொம்பில் மருத்துவ குணம் உள்ளதாக கூறப்படுவதால், அவற்றை கொன்று கொம்புகள் கடத்தப்படுகின்றன.

இவ்வாறு கடத்தலில் பிடிபட்ட, உலகிலேயே மிக அதிகமான 2,479 காண்டாமிருக கொம்புகளை அசாம் பராமரித்து வந்தது. இந்நிலையில் நேற்று, சர்வதேச காண்டாமிருக பாதுகாப்பு தினத்தையொட்டி, உரிய சடங்குகளுடன் அனைத்து காண்டாமிருக கொம்புகளும் தீ வைத்து எரிக்கப்பட்டன.

இந்நிகழ்ச்சியில், முதல்வர் ஹிமந்த பிஸ்வா சர்மா பேசியதாவது:காண்டாமிருக கொம்புக்கு மருத்துவ குணம் எதுவும் கிடையாது. இதை நிரூபிக்க, காண்டாமிருக கொம்புகள் உரிய சடங்குகளுடன் எரியூட்டப்பட்டன. இதை விற்பனை செய்திருந்தால் அரசுக்கு வருவாய் கிடைக்குமே என சிலர் கூறுகின்றனர்.

பணம் கிடைக்கிறது என்பதற்காக, சிறுநீரகத்தை விற்பது சரியா என அவர்களை நான் கேட்கிறேன். இந்த அரசு ஆட்சியில் உள்ளவரை இனி இந்த மாநிலத்தில் காண்டாமிருகத்தை கொல்வது அவ்வளவு சுலபம் அல்ல என தெரிவித்துக் கொள்கிறேன். இயற்கையாக இறந்த 94 காண்டாமிருகங்களின் கொம்புகளுக்கு, அருங்காட்சியகம் ஒன்று ஏற்படுத்தப்படும். உலகின் மிக உயரமான 42.5 செ.மீ., காண்டா மிருக கொம்பும் இங்கு காட்சிக்கு வைக்கப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X