அரசியல் செய்தி

தமிழ்நாடு

தியாகராஜன் ஊர் வம்பு இழுப்பது சரியல்ல: டி.கே.எஸ்.இளங்கோவன் 'பளிச்' அறிவுரை!

Updated : செப் 24, 2021 | Added : செப் 22, 2021 | கருத்துகள் (63)
Share
Advertisement
சரக்கு மற்றும் சேவை வரி எனப்படும், ஜி.எஸ்.டி., கவுன்சில் கூட்டத்தில், நிதி அமைச்சர் தியாகராஜன் பங்கேற்காத விவகாரம், சர்ச்சையை உருவாக்கி உள்ளதால், ''ஊர் வம்பு இழுப்பது சரியல்ல,'' என்று, தி.மு.க., - எம்.பி.,யான டி.கே.எஸ்.இளங்கோவன், அவருக்கு அறிவுரை கூறியுள்ளார். சமூக வளைகாப்பு விழாஉ.பி., மாநிலம், லக்னோவில், 45வது ஜி.எஸ்.டி., கவுன்சில் கூட்டம், 17ல் நடந்தது. மத்திய நிதி
தியாகராஜன், ஊர் வம்பு, இளங்கோவன்

சரக்கு மற்றும் சேவை வரி எனப்படும், ஜி.எஸ்.டி., கவுன்சில் கூட்டத்தில், நிதி அமைச்சர் தியாகராஜன் பங்கேற்காத விவகாரம், சர்ச்சையை உருவாக்கி உள்ளதால், ''ஊர் வம்பு இழுப்பது சரியல்ல,'' என்று, தி.மு.க., - எம்.பி.,யான டி.கே.எஸ்.இளங்கோவன், அவருக்கு அறிவுரை கூறியுள்ளார்.


சமூக வளைகாப்பு விழா


உ.பி., மாநிலம், லக்னோவில், 45வது ஜி.எஸ்.டி., கவுன்சில் கூட்டம், 17ல் நடந்தது. மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் நடந்த கூட்டத்தில், தமிழக நிதி அமைச்சர் தியாகராஜன் பங்கேற்கவில்லை.

இது தொடர்பாக தியாகராஜன் அளித்த விளக்கத்தில், 'கூட்டம் பற்றிய தகவல், எனக்கு தாமதமாக கிடைத்தது.எனக்கு முன்கூட்டியே சில பணிகள் இருந்ததால், அங்கு செல்கிறேன். தற்போது, வளைகாப்பு நிகழ்ச்சிக்கு செல்கிறேன்' என, கோபாவேசமாக கூறியுள்ளார்.இது, சமூக வலைதளங்களில் விவாதமாகி, பெரும் சர்ச்சையை உருவாக்கியது.

'கொழுந்தியாளுக்கா வளைகாப்பு?' என, சிலர் கேள்வி எழுப்பினர். அதேநேரத்தில், மதுரை, ஆரப்பாளையத்தில், அரசு சார்பில் நடந்த சமூக வளைகாப்பு விழாவில் தியாகராஜன் பங்கேற்றார். 'எனக்கு கொழுந்தியாள் இல்லை' என்றார்.

இது தொடர்பாக, தி.மு.க., ராஜ்யசபா எம்.பி.,யான டி.கே.எஸ்.இளங்கோவன் கூறியதாவது: தேவையில்லாமல், தியாகராஜன் கோபத்தை துாண்டும் வகையில் எதிர்க்கட்சியினர் பேசுகின்றனர். பதில் அளிக்கும்போது, அவர் எளிதில் உணர்ச்சி வசப்படுகிறார். ஜி.எஸ்.டி., கவுன்சில் கூட்டத்திற்கு கண்டிப்பாக அவர் சென்றிருக்க வேண்டும். இதை புறக்கணித்தால், தமிழக நலன் பாதிக்கும்.


கண்டனம்


முதல்வரிடம் அனுமதி வாங்கினாரா என்பது எனக்கு தெரியாது. ஏன் செல்லவில்லை என்பதும் எனக்கு தெரியாது. அமைதியாக இருக்கும்படி, அவரிடம் கட்சித் தலைமை உத்தரவிட்டுள்ளதா என்பதும் தெரியாது. ஆனால், முதல்வர் பலமுறை எச்சரித்து, அவருக்கு அறிவுரை வழங்கினார். தொடர்ந்து, ஊர் வம்பை இழுப்பது சரியல்ல. இவ்வாறு அவர் கூறினார்.

இதற்கிடையில், தியாகராஜன் புறக்கணித்தது பற்றி, தி.மு.க., வட்டாரத்தில் சில தகவல்கள் சொல்லப்படுகின்றன.அதாவது, மற்ற மாநில நிதி அமைச்சர்கள், தனி விமானத்தில் லக்னோ சென்றதுபோல், தனக்கும் தனி விமானம் கேட்டதாகவும், முதல்வர் ஸ்டாலின் மறுத்து விட்டதால், தியாகராஜன் செல்ல வில்லை என்றும் கூறப்படுகிறது.

தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை, அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் ஆகியோர் தியாகராஜனுக்கு கண்டனம் தெரிவித்திருந்தனர்.
சர்ச்சை


இதற்கு, தியாகராஜன் பதிலடி தரும் வகையில், 'என், 14 பக்க அறிக்கையை, கவுன்சிலுக்கு அனுப்பி விட்டேன். நிதி அமைச்சகமும் ஏற்று விட்டது. இதை வைத்து, வீண் வதந்தி கிளப்பாதீர்கள்' என்றார்.

ஆனாலும், லக்னோவில் நடந்த ஜி.எஸ்.டி., கவுன்சில் கூட்டத்தில் பங்கேற்காதது தொடர்பாக, தியாகராஜன் அளித்த விளக்கம், நக்கல் பேச்சு, தேசிய அளவில் சர்ச்சையாகி உள்ளது. பதவி விலக வேண்டும் என, சமூக வலைதளங்களில், அவருக்கு எதிரான கருத்துக்களும் பரவி வருகின்றன.

விரைவில், ஜி.எஸ்.டி., கவுன்சிலின் அடுத்த கூட்டம் நடக்க உள்ளது. அதற்காவது தியாகராஜன் செல்வாரா அல்லது புறக்கணித்து விட்டு, 'பிரசவம், பெயர் சூட்டு விழா' என ஏதாவது காரணம் சொல்வாரா என்றும் வலைதளங்களில் கிண்டலடிக்கப்படுகிறது.

இப்படி அடிக்கடி சர்ச்சையில் சிக்குவதால், 'மத்திய அரசுக்கு எதிராக எந்த ஒரு கருத்தும் தெரிவிக்காமல், அமைதி காக்க வேண்டும்' என தியாகராஜனுக்கு, தி.மு.க., மேலிடம் வாய்ப்பூட்டு போட்டு உள்ளதாக தெரிகிறது.

- நமது நிருபர் -

Advertisement
வாசகர் கருத்து (63)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
சீனி - Bangalore,இந்தியா
27-செப்-202114:36:52 IST Report Abuse
சீனி அடுத்த வாரம் டி.கே.எஸ்.இளங்கோவனுக்கு டிவிட்டரில் மறைமுகமாக ஏச்சு பேச்சா அமைச்சர் கிட்ட இருந்து பதில் வரும். சொந்த காரணங்களுக்காக, தமிழக மக்களின் எதிர்பார்ப்பை, பணிக்கான பொறுப்பை முறையாக நிறைவேற்ற முடியவில்லையெனில் பதவி விலகுவதே அவருக்கு நல்லது. அப்படியே அடம்பிடித்து அமைச்சரா தான் இருக்கனும்னா, செய்தி விளம்பரத்துறை மாதிரி எதுனா சுலபமான பதவிக்கு மாறிக்கொண்டு டிவிட்டரில் எல்லோரையும் வசை பாடி கட்சிக்கு செய்தி மற்றும் விளம்பரம் தேடலாம்.
Rate this:
Cancel
kanisha - CHENNai,இந்தியா
27-செப்-202113:30:44 IST Report Abuse
kanisha தமிழக நிதி மந்திரி " பேரூ பெத்த பேரு தாக நீலு லேது " இவ்வளவுதான்
Rate this:
Cancel
Lawrence Ron - WASHINGTON DC,யூ.எஸ்.ஏ
27-செப்-202111:42:08 IST Report Abuse
Lawrence Ron அவர் சொன்னார் இவர் சொன்னார் என்று எழுதும் மனித குலத்துக்கு எதிரான ஊடகம் அங்கு நடந்த கூட்டத்தில் என்ன நடக்கும் எதையும் கேட்பார்களா நம் பேசமுடியுமா எதையும் கேட்டமுடியுமா பதில் சொல்லவர்களா எந்த அனுமதியும் கிடைக்காது பேச முடியாது பதில் கிடைக்காத பெயருக்கான கூட்டம் எழுதிகொடுத்தை வந்து படித்துக்காட்டிவிட்டு கிளம்பிவிடுவார்கள் அதுதான் கவுன்சில் கூட்டம் தமிழகத்தின் கடலை மிட்டாய் இட்லி மாவு அரைக்கும் கிரைண்டர் அரிசி என்ன நிலைமை மாறிவிட்டதா கோதுமை என்ன வரி
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X