பாலியல் பலாத்காரம் கார் டிரைவர் மீது இளம்பெண் புகார்

Added : செப் 22, 2021
Share
Advertisement
பெங்களூரு:கார் டிரைவர் தன்னை பாலியல் பலாத்காரம் செய்ய முயற்சித்தாக இளம்பெண் புகார் அளித்துள்ளார். அந்த புகாரை வாடகை கார் ஓட்டுனர் மறுத்துள்ளார்.பெங்களூரு எச். எஸ்.ஆர்., லே - அவுட் முருகேஷ் பாளையாவை சேர்ந்த இளம் பெண் ஒருவர், ஜீவன் பீமா நகரில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்க்கிறார். நேற்று அதிகாலை 4:00 மணிக்கு வீடு திரும்ப வாடகை காரை வரவழைத்தார்.தன்னை அழைத்து செல்ல

பெங்களூரு:கார் டிரைவர் தன்னை பாலியல் பலாத்காரம் செய்ய முயற்சித்தாக இளம்பெண் புகார் அளித்துள்ளார். அந்த புகாரை வாடகை கார் ஓட்டுனர் மறுத்துள்ளார்.

பெங்களூரு எச். எஸ்.ஆர்., லே - அவுட் முருகேஷ் பாளையாவை சேர்ந்த இளம் பெண் ஒருவர், ஜீவன் பீமா நகரில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்க்கிறார். நேற்று அதிகாலை 4:00 மணிக்கு வீடு திரும்ப வாடகை காரை வரவழைத்தார்.தன்னை அழைத்து செல்ல வந்த காரின் டிரைவர் தன்னை பாலியல் பலாத்காரம் செய்து விட்டதாக அந்த இளம்பெண், ஜீவன் பீமா நகர் போலீசில் புகார் அளித்துள்ளார்.

இதையடுத்து போலீசார் கார் டிரைவரை கண்டுபிடித்து கைது செய்தனர். அவரது பெயர் தேவராஜ், 35. ஆந்திராவை சேர்ந்தவர். ஆனால் அவர், அந்த இளம்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்யவில்லை என கூறியுள்ளார்.கார் டிரைவர் கூறுகையில், 'அந்த இளம்பெண் குடிபோதையில் இருந்தார். சுயநினைவு கூட இல்லாமல், இறங்க வேண்டிய இடம் வந்தும் இறங்கவில்லை. அவரை இறக்கி விட சென்றேன். இதை பார்த்து அவர் நான் பலாத்காரம் செய்ய முயற்சித்தாக கூறுகிறார்' என்றார்.

சம்பவம் குறித்து கூடுதல் எஸ்.பி., முருகன் கூறுகையில், ''இரண்டு பேர் தரப்பிலும் வாக்குவாதம் நடந்துள்ளது. அந்த பெண் அவரை தள்ளி விட்டு சென்றுள்ளார். காருக்கான வாடகை பணத்தையும் அந்த பெண் டிரைவரிடம் தரவில்லை. அந்த பெண் ஓட்டலில் வேலை செய்கிறார்.''கார் டிரைவர் பலாத்காரம் செய்யவில்லை என கூறுகிறார்.

விசாரணை நடந்து வருகிறது. உண்மை விரைவில் தெரிய வரும். இது சம்பந்தமாக இன்னும் எப்.ஐ.ஆர்., போடவில்லை. தற்போது பையப்பனஹள்ளி போலீஸ் நிலையத்தில், கார் டிரைவரிடம் டி.சி.பி., சரணப்பா விசாரித்து வருகிறார்,'' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X