புடவையில் வந்த பெண்ணுக்கு அனுமதி மறுத்த உணவகம்

Added : செப் 22, 2021
Share
Advertisement
புதுடில்லி:டில்லியில், புடவை அணிந்த வந்த பெண்ணை அனுமதிக்க மறுத்த உணவகத்திற்கு, பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.டில்லியில், முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி ஆட்சி நடக்கிறது. இங்குள்ள ஒரு தனியார் நட்சத்திர உணவகத்திற்கு, பெண் ஒருவர் புடவை அணிந்து சென்றுள்ளார். எனினும், அவரை உள்ளே செல்ல அனுமதிக்காத உணவக ஊழியர்கள், 'மேற்கத்திய உடையில் வந்தால்

புதுடில்லி:டில்லியில், புடவை அணிந்த வந்த பெண்ணை அனுமதிக்க மறுத்த உணவகத்திற்கு, பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

டில்லியில், முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி ஆட்சி நடக்கிறது. இங்குள்ள ஒரு தனியார் நட்சத்திர உணவகத்திற்கு, பெண் ஒருவர் புடவை அணிந்து சென்றுள்ளார். எனினும், அவரை உள்ளே செல்ல அனுமதிக்காத உணவக ஊழியர்கள், 'மேற்கத்திய உடையில் வந்தால் மட்டுமே, உணவகத்திற்குள் செல்ல அனுமதிக்கப்படுவர்' என்றும் தெரிவித்துள்ளனர்.

இது குறித்து, ஊழியரிடம், அந்த பெண் உரையாடும் காட்சிகள் அடங்கிய, 'வீடியோ' ஒன்று, தற்போது வெளியாகி உள்ளது.அந்த வீடியோவில் பேசும் பெண், 'புடவையில் வந்தால், உணவகத்திற்கு உள்ளே செல்ல அனுமதி இல்லையா' என, கேள்வி எழுப்பி உள்ளார். அதற்கு பதிலளித்த பெண் ஊழியர் ஒருவர், 'மேடம், மேற்கத்திய உடையில் வருவோருக்கு மட்டுமே நாங்கள் அனுமதி வழங்குகிறோம்; புடவையில் வருவோருக்கு அனுமதி இல்லை' என, பதில் அளித்துள்ளார்.

இந்த காட்சிகள் அடங்கிய வீடியோ, 'பேஸ்புக், டுவிட்டர், 'யுடியூப்' உள்ளிட்ட சமூக ஊடகங்களில் வேகமாக பரவி வருகிறது. 2.25 லட்சத்திற்கும் அதிகமான மக்கள், இந்த வீடியோவை பார்த்து உள்ளனர். இதை பார்த்த பலரும், தங்கள் எதிர்ப்பையும், கண்டனத்தையும் பதிவு செய்து வருகின்றனர்.'இந்திய கலாசாரத்தை அழிக்கும் முயற்சி இது' என, பதிவிட்டிருந்த ஒருவர், அந்த உணவகத்தை புறக்கணிக்கவும், மக்களிடம் அறிவுறுத்தி உள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X