பொது செய்தி

இந்தியா

கொரோனா பலிக்கு ரூ.50 ஆயிரம் இழப்பீடு

Added : செப் 22, 2021
Share
Advertisement
புதுடில்லி:கொரோனாவால் உயிரிழந்தோரின் குடும்பத்துக்கு 50 ஆயிரம் ரூபாய் இழப்பீடு வழங்க, தேசிய பேரிடர் நிர்வாக ஆணையம் பரிந்துரைத்து உள்ளதாக உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்து உள்ளது.கொரோனாவால் பலியானோர் குடும்பத்தாருக்கு இழப்பீடு வழங்குவது தொடர்பாக, உச்ச நீதிமன்றத்தில் வழக்கு விசாரணையில் உள்ளது. கடந்த ஜூன் 30ல் அளித்த உத்தரவில், கொரோனாவால் உயிரிழந்தோர்

புதுடில்லி:கொரோனாவால் உயிரிழந்தோரின் குடும்பத்துக்கு 50 ஆயிரம் ரூபாய் இழப்பீடு வழங்க, தேசிய பேரிடர் நிர்வாக ஆணையம் பரிந்துரைத்து உள்ளதாக உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்து உள்ளது.

கொரோனாவால் பலியானோர் குடும்பத்தாருக்கு இழப்பீடு வழங்குவது தொடர்பாக, உச்ச நீதிமன்றத்தில் வழக்கு விசாரணையில் உள்ளது. கடந்த ஜூன் 30ல் அளித்த உத்தரவில், கொரோனாவால் உயிரிழந்தோர் குடும்பத்துக்கான இழப்பீடு வழங்குவது தொடர்பான நெறிமுறைகளை ஆறு வாரங்களுக்குள் வெளியிடும்படி, தேசிய பேரிடர் நிர்வாக ஆணையத்துக்கு உச்ச நீதிமன்றம் குறிப்பிட்டுஇருந்தது.

இந்த வழக்கில் மத்திய அரசு சார்பில் தாக்கல் செய்த பதில் மனு:கொரோனாவால் உயிரிழந்தோர் குடும்பத்தாருக்கு 50 ஆயிரம் ரூபாய் இழப்பீடு வழங்க, தேசிய பேரிடர் நிர்வாக ஆணையம் பரிந்துரைத்து உள்ளது. இந்த இழப்பீட்டை, மாநில பேரிடர் நிர்வாக நிதியில் இருந்து மாநிலங்கள் வழங்கும்.

மேலும், கொரோனா தடுப்பு மற்றும் சிகிச்சை நடவடிக்கைகளில் ஈடுபட்டு, கொரோனா பாதிப்பால் உயிரிழந்தோர் குடும்பத்துக்கும் உரிய இழப்பீடு வழங்கப்படும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X