20 தெரு நாய்களை கொன்றவர் கைது

Added : செப் 22, 2021
Share
Advertisement
கட்டாக்:ஒடிசாவில், 20க்கும் மேற்பட்ட தெரு நாய்களை விஷம் வைத்து கொன்ற இனிப்புக் கடை உரிமையாளரை போலீசார் கைது செய்தனர்.ஒடிசாவின் கட்டாக் நகரில் உள்ள சங்கர்பூர் கிராமம் அருகே, 20க்கும் மேற்பட்ட தெரு நாய்கள் செத்துக் கிடந்தது அப்பகுதி மக்களை அதிர்ச்சி அடைய செய்தது. அப்பகுதியில் இனிப்பு கடை நடத்தி வரும் 24 வயது இளைஞர், இந்த நாய்களுக்கு விஷம் வைத்து கொன்றதாக கூறப்பட்டது. இது

கட்டாக்:ஒடிசாவில், 20க்கும் மேற்பட்ட தெரு நாய்களை விஷம் வைத்து கொன்ற இனிப்புக் கடை உரிமையாளரை போலீசார் கைது செய்தனர்.

ஒடிசாவின் கட்டாக் நகரில் உள்ள சங்கர்பூர் கிராமம் அருகே, 20க்கும் மேற்பட்ட தெரு நாய்கள் செத்துக் கிடந்தது அப்பகுதி மக்களை அதிர்ச்சி அடைய செய்தது. அப்பகுதியில் இனிப்பு கடை நடத்தி வரும் 24 வயது இளைஞர், இந்த நாய்களுக்கு விஷம் வைத்து கொன்றதாக கூறப்பட்டது. இது குறித்து விசாரணை நடத்தியபோது, அவர் குற்றத்தை ஒப்புக் கொண்டார்.

தினமும் இரவில் நாய்கள் ஊளையிடுவது ஆத்திரத்தை ஏற்படுத்தியதால், உணவில் விஷம் கலந்து கொடுத்ததாக தெரிவித்தார்.அவரை போலீசார் கைது செய்தனர். இறந்த நாய்களின் உடல்கள் உடற்கூறாய்வுக்கு அனுப்பப்பட்டன.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X