தொடரும் போதைப் பொருள் வேட்டை டில்லி, நொய்டாவில் 37 கிலோ பறிமுதல்

Added : செப் 22, 2021
Share
Advertisement
புதுடில்லி:குஜராத்தின் முந்த்ரா துறைமுகத்தில், 21 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள மூவாயிரம் கிலோ போதைப் பொருள் பறிமுதல் செய்யப்பட்டதைத் தொடர்ந்து, வருவாய் புலனாய்வு துறையினர் மேலும் பல இடங்களில் சோதனையில் ஈடுபட்டனர். இதில், 37 கிலோ போதைப் பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.குஜராத்தின் முந்த்ரா துறைமுகத்துக்கு வந்த சரக்கு கன்டெய்னர்களில், முக பவுடர்களுடன் மறைத்து

புதுடில்லி:குஜராத்தின் முந்த்ரா துறைமுகத்தில், 21 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள மூவாயிரம் கிலோ போதைப் பொருள் பறிமுதல் செய்யப்பட்டதைத் தொடர்ந்து, வருவாய் புலனாய்வு துறையினர் மேலும் பல இடங்களில் சோதனையில் ஈடுபட்டனர். இதில், 37 கிலோ போதைப் பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

குஜராத்தின் முந்த்ரா துறைமுகத்துக்கு வந்த சரக்கு கன்டெய்னர்களில், முக பவுடர்களுடன் மறைத்து வைக்கப்பட்டிருந்த, மூவாயிரம் கிலோ ஹெராயின் போதைப் பொருள் சமீபத்தில் மீட்கப்பட்டது. ஆப்கானிஸ்தானில் இருந்து ஈரான் வழியாக இது கடத்தி வரப்பட்டுள்ளது விசாரணையில் தெரியவந்துள்ளது.இது தொடர்பாக, ஏற்றுமதி, இறக்குமதி நிறுவனத்தை நடத்தும் சென்னையில் வசிக்கும் ஆந்திர தம்பதியினர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதைத் தவிர, தமிழகத்தின் சென்னை, கோவை, குஜராத்தின் ஆமதாபாத், தேசிய தலைநகர் டில்லி உள்ளிட்ட இடங்களில் வருவாய் புலனாய்வு துறையினர் சோதனைகளில் ஈடுபட்டனர். இதில், டில்லி மற்றும் அதை ஒட்டியுள்ள உத்தர பிரதேசத்தின் நொய்டாவில், 37 கிலோ எடையுள்ள, ஹெராயின், கோகைன் உள்ளிட்ட போதைப் பொருள் மீட்கப்பட்டுள்ளன.

இந்த போதைப் பொருள் கடத்தல் வழக்கில், சென்னை தம்பதி உள்பட, எட்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அதில், நான்கு ஆப்கானிஸ்தானியர்கள், ஒரு உஸ்பெகிஸ்தானியரும் அடங்குவர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X