கோர்ட் செய்தி

தமிழ்நாடு

இணை கமிஷனர் பதிலுக்கு ஐகோர்ட் கண்டிப்பு: ஏன் நடவடிக்கை எடுக்கக் கூடாது என கேள்வி

Added : செப் 22, 2021 | கருத்துகள் (1)
Share
Advertisement
சென்னை:திருவாரூர் மாவட்டத்தில் உள்ள பெருமாள் கோவில் நிலம் தொடர்பாக, அறநிலையத்துறை இணை கமிஷனர் பதில் அளித்த விதத்துக்கு, சென்னை உயர் நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது. அவருக்கு எதிராக ஏன் நடவடிக்கை எடுக்கக் கூடாது எனவும் கேள்வி எழுப்பி உள்ளது.சென்னையைச் சேர்ந்த வழக்கறிஞர் யானை ராஜேந்திரன் தாக்கல் செய்த மனு:திருவாரூர் மாவட்டம், திருக்கண்ணமங்கை கிராமத்தில்

சென்னை:திருவாரூர் மாவட்டத்தில் உள்ள பெருமாள் கோவில் நிலம் தொடர்பாக, அறநிலையத்துறை இணை கமிஷனர் பதில் அளித்த விதத்துக்கு, சென்னை உயர் நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது. அவருக்கு எதிராக ஏன் நடவடிக்கை எடுக்கக் கூடாது எனவும் கேள்வி எழுப்பி உள்ளது.

சென்னையைச் சேர்ந்த வழக்கறிஞர் யானை ராஜேந்திரன் தாக்கல் செய்த மனு:திருவாரூர் மாவட்டம், திருக்கண்ணமங்கை கிராமத்தில் பக்தவத்சல பெருமாள் கோவில் உள்ளது. இது, 1,000 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்டது. இந்த கோவிலுக்கு, விஜயரகுநாத அரசர், 400 ஏக்கர் நிலத்தை தானமாக வழங்கி உள்ளார்.கோவிலுக்கு வழங்கப்பட்ட நிலம், புனரமைப்பு விபரங்கள், தாமிர பட்டயத்தில் பொறிக்கப்பட்டுள்ளது. இந்த தாமிர பட்டயம், தற்போது கோவிலில் இல்லை.

இதுகுறித்து, உரிய விசாரணை நடத்தப்பட வேண்டும்.5,000 கோடி ரூபாய்மொத்தமுள்ள 400 ஏக்கர் நிலத்தில், 7 ஏக்கர் நிலம் தான் கோவில் வசம் உள்ளது; மற்றவை தனியார் வசம் உள்ளது. இந்த நிலங்களின் மதிப்பு, 5,000 கோடி ரூபாய்க்கு மேல் இருக்கும்.எனவே, தாமிர பட்டயம், 400 ஏக்கர் நிலங்களை மீட்க, அரசுக்கு அறநிலையத்துறைக்கு உத்தரவிட வேண்டும்.இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.

மனு, தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி, நீதிபதி ஆதிகேசவலு அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது.அரசு தரப்பில், அட்வகேட் ஜெனரல் சண்முகசுந்தரம் ஆஜராகி, ''தாமிர பட்டயம் காணாமல் போகவில்லை. புராதன பொருளாக அறிவிக்கப்பட்டு, அறநிலையத்துறை இணை கமிஷனரின் கட்டுப்பாட்டில் வைக்கப்பட்டுள்ளது,'' என்றார்.

இதையடுத்து, 400 ஏக்கர் நிலம் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதா என்பது குறித்து, அரசு ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்யும்படி, முதல் பெஞ்ச் உத்தரவிட்டது.

இந்நிலையில், வழக்கு, முதல் பெஞ்ச் முன் விசாரணைக்கு வந்தது. தஞ்சையில் உள்ள அறநிலையத்துறை இணை கமிஷனர் பதில் மனு தாக்கல் செய்தார். இதையடுத்து, முதல் பெஞ்ச் பிறப்பித்த உத்தரவு: இணை கமிஷனரின் பதில் மனுவில், கோவிலுக்கு சொந்தமான 206.93 ஏக்கர் நிலம் அடையாளம் காணப்பட்டு இருப்பதாகவும், பெரும்பாலானவை குத்தகைக்கு விடப்பட்டு இருப்பதாகவும், ஆக்கிரமிப்பாளர்கள் வசம் சில இருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.

கோவில் நிலத்தை யார் குத்தகைக்கு விட்டிருப்பர்; ஆக்கிரமிப்பாளர்கள் எத்தனை பேர் வசம் நிலம் உள்ளது; எந்தப் பகுதி குத்தகைக்கு விடப்பட்டுள்ளது; எவை ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது என்பது குறித்து, பதில் மனுவில் எதுவும் குறிப்பிடப்படவில்லை.அவமரியாதைபதில் மனு தாக்கல் செய்த விதத்தை பார்க்கும்போது, நீதிமன்ற அவமதிப்பு உள்ளிட்ட நடவடிக்கையை, இணை கமிஷனருக்கு எதிராக எடுக்க வேண்டியது வருகிறது.

சட்டத்தில் கூறப்பட்டுள்ள நடைமுறை சிக்கலாக இருப்பதாகவும், காலவரம்பை நிர்ணயிக்க முடியாது எனவும் கூறியிருப்பது, அவரது அகந்தையை காட்டுகிறது.நீதிமன்றத்தை அவமரியாதை செய்யும் விதமாக பதில் மனு தாக்கல் செய்தது; தகவல் தருவதில் கவனம் செலுத்தாமல் கடமை தவறியதற்காக, இணை கமிஷனரான தென்னரசுக்கு எதிராக ஏன் நடவடிக்கை எடுக்கக் கூடாது என்பதற்கு, அவர் விளக்கம் அளித்து மனு தாக்கல் செய்ய வேண்டும்.


நடவடிக்கை

கோவிலுக்கு சொந்தமாக எவ்வளவு நிலம் உள்ளது; வாடகைக்கு விடப்பட்ட நிலம் எவ்வளவு; ஆக்கிரமிப்பாளர்களிடம் இருந்து நிலங்களை மீட்க எடுத்த நடவடிக்கை பற்றிய விபரங்களை, அறநிலையத்துறை செயலர் தாக்கல் செய்ய வேண்டும்.இவ்வாறு முதல் பெஞ்ச் உத்தரவிட்டு உள்ளது.விசாரணையை, அக்., 20க்கு முதல் பெஞ்ச் தள்ளி வைத்தது.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Rajaiah Samuel Muthiahraj - Canberra /kancheepuram,இந்தியா
23-செப்-202117:55:35 IST Report Abuse
Rajaiah Samuel Muthiahraj கோவில் நிலங்களை மீட்டு எடுப்பது போல அரசு நிலங்களையும் வீதிகளையும் பொது இடங்களையும் ஆக்கிரமிப்பு செய்துள்ளோரிடமிருந்து மீட்டு எடுக்கவேண்டும் காஞ்சிபுரத்தில் ஆட்சியில் இருப்பினும் எவர் மாவட்ட ஆட்சி தலைவராக வரினும் எதுவும் செய்யமுடியாது
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X