பொது செய்தி

தமிழ்நாடு

அரசியல் மீது நம்பிக்கை இல்லை மதுரையில் காந்தி பேத்தி கருத்து

Added : செப் 22, 2021
Share
Advertisement
மதுரை:''அரசியல் மீது நம்பிக்கை இல்லை; ஜனநாயகத்தை மட்டுமே நம்புகிறேன்,'' என, மதுரையில், காந்தி பேத்தி தாரா காந்தி பட்டாச்சார்யா தெரிவித்தார்.கடந்த 1921 செப்., 22ல் இரண்டாம் முறையாக மதுரை வந்த காந்தி, அரையாடைக்கு மாறிய நிகழ்வின் நுாற்றாண்டு விழா, காந்தி மியூசியத்தில் நேற்று நடந்தது. இதில், காந்தி பேத்தி பேசியதாவது:காந்தி அரையாடை புரட்சியின் நுாற்றாண்டு விழா சிறப்பாக
 அரசியல் மீது நம்பிக்கை இல்லை மதுரையில் காந்தி பேத்தி கருத்து

மதுரை:''அரசியல் மீது நம்பிக்கை இல்லை; ஜனநாயகத்தை மட்டுமே நம்புகிறேன்,'' என, மதுரையில், காந்தி பேத்தி தாரா காந்தி பட்டாச்சார்யா தெரிவித்தார்.

கடந்த 1921 செப்., 22ல் இரண்டாம் முறையாக மதுரை வந்த காந்தி, அரையாடைக்கு மாறிய நிகழ்வின் நுாற்றாண்டு விழா, காந்தி மியூசியத்தில் நேற்று நடந்தது. இதில், காந்தி பேத்தி பேசியதாவது:காந்தி அரையாடை புரட்சியின் நுாற்றாண்டு விழா சிறப்பாக உள்ளது. மதுரை பெருமையை இன்று உலகமே திரும்பி பார்க்கிறது.

மீனாட்சி அம்மனை தரிசனம் செய்தது மிகுந்த மன நிறைவு அளிக்கிறது. என் தாயின் ஆசி பெற்றதாக உணர்கிறேன்.விவசாயிகள், ஏழைகள் துன்பத்தை வெளிப்படுத்த காந்தி அரையாடைக்கு மாறினார். அப்போது, அவர் காவி நிறத்தை நேர்ந்தெடுக்காமல் எளிமையை தான் தேர்ந்தெடுத்தார்.

1947ல் நாட்டிற்கு அரசியல் விடுதலை தான் கிடைத்தது. இன்னும் நீதிக்காக நாம் போராடுகிறோம். காந்தியின் கருத்துக்கள் எல்லா காலத்திற்கும் ஏற்றவை. இளைஞர்கள் காந்தி போல் வாசிக்கும், எழுதும் பழக்கத்தை பின்பற்ற வேண்டும். பிற மொழி, மனிதர்கள் போல் பிற மதங்களையும் மதிக்க வேண்டும். அரசியல் மீது நம்பிக்கை இல்லை; ஜனநாயகத்தை மட்டுமே நம்புகிறேன். இவ்வாறு அவர் பேசினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X