சம்பவம் செய்தி

தமிழ்நாடு

சட்டை 'பட்டன்' போடாத ஆசிரியருக்கு 'நோட்டீஸ்'

Added : செப் 22, 2021
Share
Advertisement
சென்னை:சட்டை பொத்தானை கழற்றி விட்ட நிலையில் பணியில் இருந்த, அரசு பள்ளி ஆசிரியரிடம் விளக்கம் கேட்டு, பள்ளி கல்வி துறை சார்பில், 'நோட்டீஸ்' அனுப்பப்பட்டுள்ளது.கரூர் மாவட்டத்தில் உள்ள கார்வழி அரசு உயர்நிலைப் பள்ளிக்கு, முதன்மை கல்வி அதிகாரி மதன்குமார், சில நாட்களுக்கு முன், திடீர் ஆய்வுக்காக சென்றுள்ளார். அங்குள்ள ஓவிய பாட ஆசிரியர் சவுந்தரராஜன், மாணவ - மாணவியர்

சென்னை:சட்டை பொத்தானை கழற்றி விட்ட நிலையில் பணியில் இருந்த, அரசு பள்ளி ஆசிரியரிடம் விளக்கம் கேட்டு, பள்ளி கல்வி துறை சார்பில், 'நோட்டீஸ்' அனுப்பப்பட்டுள்ளது.

கரூர் மாவட்டத்தில் உள்ள கார்வழி அரசு உயர்நிலைப் பள்ளிக்கு, முதன்மை கல்வி அதிகாரி மதன்குமார், சில நாட்களுக்கு முன், திடீர் ஆய்வுக்காக சென்றுள்ளார். அங்குள்ள ஓவிய பாட ஆசிரியர் சவுந்தரராஜன், மாணவ - மாணவியர் மற்றும் ஆசிரியைகள் சூழ்ந்திருந்த இடத்தில், சட்டையை ஒழுங்காக போடாமல், ஒழுக்கக் குறைவாக இருந்ததாக கண்டறியப்பட்டது.

சட்டையின் இரண்டு மேல் பட்டன்களை அவிழ்த்து விட்ட நிலையில் அவர் அமர்ந்திருந்தார். அவரை கண்டித்த அதிகாரி, மாணவியர் மற்றும் ஆசிரியைகள் முன்னிலையில் கண்ணியமாக உடை அணிந்து பணியாற்ற வேண்டும் என, எச்சரித்துள்ளார்.இதை தொடர்ந்து, இந்த சம்பவம் குறித்து, உரிய விளக்கம் அளிக்குமாறு, ஆசிரியர் சவுந்தரராஜனுக்கு, பள்ளி கல்வி அதிகாரிகள் நோட்டீஸ் அனுப்பியுள்ளனர்.

அதே பள்ளியில் அலுவலக பதிவேடுகளை, முதன்மை கல்வி அதிகாரி ஆய்வு செய்தபோது, ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்களுக்கான பதிவேடுக்கு, மாணவர்களுக்கான இலவச நோட்டு புத்தகத்தை பயன்படுத்தியதும் தெரிய வந்தது.இதுகுறித்து விளக்கம் அளிக்குமாறு, தலைமை ஆசிரியருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டு உள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X