சம்பவம் செய்தி

தமிழ்நாடு

ரூ.100 கோடி மோசடி: 'டுபாக்கூர்' ஆசாமி கைது

Added : செப் 22, 2021 | கருத்துகள் (1)
Share
Advertisement
சென்னை:கவர்ச்சிகரமான திட்டங்களை விளம்பரம் செய்து, பொது மக்களிடம் 100 கோடி ரூபாய் வரை மோசடி செய்த தனியார் நிதி நிறுவன அதிபரை, பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் கைது செய்துள்ளனர்.சென்னையைச் சேர்ந்தவர் சிவம் நரேந்திரன், 35; தனியார் நிதி நிறுவன அதிபர். ஜூலை 18ல், பிரபல நாளிதழ் ஒன்றில், 'எக் மார்ட்' என்ற நிறுவனம் சார்பில், முழு பக்க விளம்பரம் ஒன்றை வெளியிட்டு இருந்தார்.'ஒரு

சென்னை:கவர்ச்சிகரமான திட்டங்களை விளம்பரம் செய்து, பொது மக்களிடம் 100 கோடி ரூபாய் வரை மோசடி செய்த தனியார் நிதி நிறுவன அதிபரை, பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் கைது செய்துள்ளனர்.

சென்னையைச் சேர்ந்தவர் சிவம் நரேந்திரன், 35; தனியார் நிதி நிறுவன அதிபர். ஜூலை 18ல், பிரபல நாளிதழ் ஒன்றில், 'எக் மார்ட்' என்ற நிறுவனம் சார்பில், முழு பக்க விளம்பரம் ஒன்றை வெளியிட்டு இருந்தார்.'ஒரு முட்டை விலை, 2.24 ரூபாய் மட்டுமே. எங்கள் நிறுவனத்தில், 700 ரூபாய் முதலீடு செய்தால், வாரம்தோறும், 6 முட்டைகள்; 1,400 ரூபாய் முதலீடு செய்தால், 12 முட்டைகள்; 2,800 ரூபாய் முதலீடு செய்தால், 24 முட்டைகள் வாரம் தோறும் தருவோம்.

'இத்திட்டத்தின்படி, ஓராண்டுக்கான முட்டைகள், உங்கள் வீடுகளுக்கே டெலிவரி செய்வோம். இச்சலுகை, முதலில் பதிவு செய்யும், 5 லட்சம் பேருக்கு மட்டுமே' என, விளம்பரத்தில் அறிவித்திருந்தார்.இந்த விளம்பரம் மீது சந்தேகம் எழுந்ததால், சென்னை கிண்டியில் உள்ள பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் விசாரித்தனர்.

அது, 'டுபாக்கூர்' நிறுவனம் என தெரிந்தது. 'ஆன்லைன் வாயிலாக பணம் கட்டியவர்களுக்கு, அதே முறையில் திருப்பி அனுப்பி விடுகிறோம். இந்த நிறுவனத்தை தொடர்ந்து நடத்த மாட்டோம்' என, சிவம் நரேந்திரன் போலீசாரிடம் உறுதிமொழி அளித்தார். இதனால், தொடர் நடவடிக்கையை போலீசார் கைவிட்டனர்.

* கவர்ச்சி அறிவிப்பு அதன்பின், சிவம் நரேந்திரன், அவரது சகோதரர் உள்ளிட்டோர் நிதி நிறுவனம் நடத்தி, பல கோடி ரூபாய் சுருட்டியது தெரியவந்தது. இது குறித்து, 50க்கும் மேற்பட்டோர் பொருளாதார குற்றப்பிரிவு போலீசில் புகார் அளித்தனர். போலீசார் விசாரித்தனர்.

சிவம் நரேந்திரன் மற்றும் இவரது கூட்டாளிகள், 'ரபோல் டிஜிட்டல்' என்ற டுபாக்கூர் நிதி நிறுவனம் வாயிலாக, '1 லட்சம் ரூபாய் முதலீடு செய்தால், 2 ஆண்டுகளுக்கு மாதம்தோறும், 15 ஆயிரம் ரூபாய் வட்டியாக தரப்படும். இரண்டு ஆண்டுகள் முடிவில், 1 லட்சம் ரூபாயை திருப்பி தந்து விடுவோம்' என்பது உட்பட கவர்ச்சிகரமான திட்டங்கள் வாயிலாக, ஆயிரத்திற்கும் மேற்பட்டோரிடம், 100 கோடி ரூபாய் வரை மோசடி செய்தது, விசாரணையில் தெரியவந்தது.

இதையடுத்து, சிவம் நரேந்திரனை போலீசார் கைது செய்தனர். இவரின் சகோதரர் மற்றும் கூட்டாளிகளை தேடி வருகின்றனர். சிவம் நரேந்திரன், தி.மு.க., - எம்.எல்.ஏ., உதயநிதியை சந்தித்து, கொரோனா நிவாரண நிதி அளித்தவர்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Nanban - Kajang,மலேஷியா
23-செப்-202105:53:41 IST Report Abuse
Nanban உதார் உதயநிதியை உரிய முறையில் விசாரித்தால் இன்னும் உண்மைகள் வெளியே வரும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X