சம்பவம் செய்தி

தமிழ்நாடு

அறுவடை நேரத்தில் மழை குறுவை விவசாயிகள் கவலை

Added : செப் 22, 2021
Share
Advertisement
சென்னை:டெல்டா மாவட்டங்களில், குறுவை பருவ நெல் பயிர்கள், அறுவடை நேரத்தில் மழையால் பாதிக்கப்பட்டுள்ளன. பயிர் காப்பீடு செய்யாததால் சிக்கல் ஏற்பட்டுள்ளது.தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில், நடப்பாண்டில் 3.50 லட்சம் ஏக்கரில் குறுவை பருவ நெல் சாகுபடி மேற்கொள்ள, அரசு இலக்கு நிர்ணயம் செய்தது. மேட்டூர் அணையில் இருந்து, ஜூன் 12 முதல் தண்ணீர்

சென்னை:டெல்டா மாவட்டங்களில், குறுவை பருவ நெல் பயிர்கள், அறுவடை நேரத்தில் மழையால் பாதிக்கப்பட்டுள்ளன. பயிர் காப்பீடு செய்யாததால் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில், நடப்பாண்டில் 3.50 லட்சம் ஏக்கரில் குறுவை பருவ நெல் சாகுபடி மேற்கொள்ள, அரசு இலக்கு நிர்ணயம் செய்தது. மேட்டூர் அணையில் இருந்து, ஜூன் 12 முதல் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. யூரியா உள்ளிட்ட உரங்களை இலவசமாக வழங்கும் குறுவை தொகுப்பு திட்டத்தையும், அரசு செயல்படுத்தியது.

உற்சாகம் அடைந்த விவசாயிகள், சாகுபடியில் கவனம் செலுத்தினர். இதையடுத்து, சாகுபடி பரப்பு, 4.50 லட்சம் ஏக்கராக அதிகரித்துள்ளது. தற்போது, நெல் அறுவடை தீவிரமாக நடந்து வருகிறது. இம்மாத இறுதிக்குள் அறுவடை முழுமையடையும் என எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில், டெல்டா மாவட்டங்களில் சில நாட்களாக கன மழை பெய்து வருகிறது. இதனால், 50 ஆயிரம் ஏக்கருக்கு மேல் நெல் பயிர்கள் பாதிக்கப்பட்டுள்ளன.

குறிப்பாக திருவாரூரில் மட்டும், 25 ஆயிரம் ஏக்கர் பயிர்கள் பாதிக்கப்பட்டுள்ளன.பயிர் காப்பீட்டிற்கு வழங்கப்பட்ட பங்களிப்பு கட்டணத்தை, மத்திய அரசு குறைத்துள்ளது. இதை காரணம் காட்டி, நடப்பாண்டில் குறுவை பருவ நெல் சாகுபடிக்கு காப்பீடு செய்யப்படவில்லை. இதனால், பயிர் காப்பீடு வாயிலாக இழப்பீடு பெற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

அதிக ஈரப்பதம் உள்ள நெல்லை கொள்முதல் செய்யவும், நுகர்பொருள் வாணிப கழகம் தடை விதித்துள்ளது. நஷ்டம் ஈடு செய்ய வழி தெரியாமல், டெல்டா விவசாயிகள் தவிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X