பொது செய்தி

தமிழ்நாடு

வட மாவட்டங்களுக்கு 2 நாட்களுக்கு கன மழை

Added : செப் 22, 2021
Share
Advertisement
சென்னை:காஞ்சிபுரம் உட்பட வட மாவட்டங்களில் இன்றும், நாளையும், கன மழைக்கு வாய்ப்பு உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.இது குறித்து, சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன் வெளியிட்ட செய்திக் குறிப்பு:வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்ப சலனம் காரணமாக இன்று, கடலுார், விழுப்புரம், திருவண்ணாமலை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் டெல்டா மாவட்டங்களில், இடி, மின்னலுடன்

சென்னை:காஞ்சிபுரம் உட்பட வட மாவட்டங்களில் இன்றும், நாளையும், கன மழைக்கு வாய்ப்பு உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து, சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன் வெளியிட்ட செய்திக் குறிப்பு:வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்ப சலனம் காரணமாக இன்று, கடலுார், விழுப்புரம், திருவண்ணாமலை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் டெல்டா மாவட்டங்களில், இடி, மின்னலுடன் கூடிய கன மழை பெய்யும் வாய்ப்புள்ளது. மற்ற மாவட்டங்களில் மிதமான மழை பெய்யும்.

நாளை, விழுப்புரம், புதுச்சேரி, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவண்ணாமலை, திருவள்ளூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன மழை பெய்யும். நாளை மறுதினம், கடலோர மாவட்டங்கள் மற்றும் அதையொட்டிய உள் மாவட்டங்களில் மிதமான மழை பெய்யும்.சென்னையில் இன்று, இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யும்; சில இடங்களில் கன மழை பெய்யும்.

அதிகபட்சமாக 34 டிகிரி செல்ஷியஸ் வெப்பநிலை பதிவாகும்.இந்நிலையில், வடகிழக்கு மற்றும் அதையொட்டிய மத்திய கிழக்கு வங்கக்கடல் பகுதியில், நாளை குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு உள்ளது.இதன் காரணமாக, அந்தமான் மற்றும் அதையொட்டிய மத்திய கிழக்கு வங்கக்கடல் பகுதியில், சூறாவளி காற்று மணிக்கு 50 கி.மீ., வேகத்தில் வீச வாய்ப்புஉள்ளதால், இரண்டு நாட்களுக்கு மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுஉள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X