பொது செய்தி

தமிழ்நாடு

கோவில்களில் விரைவில் திருக்குறள் வகுப்புகள்

Added : செப் 22, 2021
Share
Advertisement
சென்னை:திருக்கோவில்களில் மாணவர்களுக்கு திருக்குறள் வகுப்புகளை நடத்தும் முயற்சியில், தமிழ் வளர்ச்சித் துறை ஈடுபட்டுள்ளது.சட்டசபையில் தமிழ் வளர்ச்சித் துறை மானியக் கோரிக்கையின்போது, திருக்கோவில்களில் ஏற்கனவே தேவாரம், திருவாசகம், திவ்வியப் பிரபந்தம் ஆகிய வகுப்புகள் நடத்தப்படுகின்றன. அவற்றுடன், திருக்குறள் வகுப்புகளும் நடத்தப்படும் என

சென்னை:திருக்கோவில்களில் மாணவர்களுக்கு திருக்குறள் வகுப்புகளை நடத்தும் முயற்சியில், தமிழ் வளர்ச்சித் துறை ஈடுபட்டுள்ளது.

சட்டசபையில் தமிழ் வளர்ச்சித் துறை மானியக் கோரிக்கையின்போது, திருக்கோவில்களில் ஏற்கனவே தேவாரம், திருவாசகம், திவ்வியப் பிரபந்தம் ஆகிய வகுப்புகள் நடத்தப்படுகின்றன. அவற்றுடன், திருக்குறள் வகுப்புகளும் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

இது குறித்து, தமிழ் வளர்ச்சித் துறை அதிகாரிகள் கூறியதாவது:தமிழகத்தில் உள்ள சைவ, வைணவக் கோவில்களில், அறநிலையத் துறை சார்பில், அறநெறி வகுப்புகள் என்ற பெயரில் தேவாரம், திருவாசகம், திவ்விய பிரபந்தம் ஆகிய வகுப்புகள் நடத்தப்படுகின்றன. இவற்றுடன், மாணவர்களுக்கு திருக்குறளையும் நடத்த தமிழ் வளர்ச்சித் துறை முயற்சித்துள்ளது.

இதுவரை, எத்தனை கோவில்களில் அறநெறி வகுப்புகள் நடத்தப்படுகின்றன; எவ்வளவு மாணவர்கள் பயன் பெறுகின்றனர். திருக்குறள் வகுப்புகளை நடத்த தேவையான கூடுதல் நேரம் மற்றும் தேவைப்படும் ஆசிரியர்கள் பற்றிய அறிக்கையை, ஹிந்து சமய அறநிலையத் துறையிடம் கேட்டுஉள்ளோம்.முழுமையான தகவல்கள் கிடைத்ததும், ஆசிரியர்களை நியமிக்க ஏற்பாடு செய்வோம். அவர்களுக்கான ஊதியத்தை அறநிலையத் துறையே வழங்கும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X