பொது செய்தி

தமிழ்நாடு

28 டி.எம்.சி., நீர் நிலுவை அடம் பிடிக்கும் கர்நாடகா

Added : செப் 22, 2021 | கருத்துகள் (1)
Share
Advertisement
சென்னை:காவிரி ஆணைய உத்தரவை மதிக்காமல், தமிழகத்திற்கு 27.7 டி.எம்.சி., நீரை கர்நாடக அரசு நிலுவை வைத்துள்ளது.தமிழகத்திற்கு ஆண்டுதோறும் 177.25 டி.எம்.சி., காவிரி நீரை, கர்நாடக அரசு வழங்க வேண்டும். ஒவ்வொரு மாதமும் வழங்க வேண்டிய நீரின் அளவை, காவிரி மேலாண்மை ஆணையம் நிர்ணயம் செய்துள்ளது. இதன்படி, ஜூன் 20ம் தேதி வரை, 110 டி.எம்.சி., நீரை கர்நாடக அரசு வழங்கி இருக்க வேண்டும். ஆனால், 83.1 டி.எம்.சி.,

சென்னை:காவிரி ஆணைய உத்தரவை மதிக்காமல், தமிழகத்திற்கு 27.7 டி.எம்.சி., நீரை கர்நாடக அரசு நிலுவை வைத்துள்ளது.தமிழகத்திற்கு ஆண்டுதோறும் 177.25 டி.எம்.சி., காவிரி நீரை, கர்நாடக அரசு வழங்க வேண்டும்.

ஒவ்வொரு மாதமும் வழங்க வேண்டிய நீரின் அளவை, காவிரி மேலாண்மை ஆணையம் நிர்ணயம் செய்துள்ளது. இதன்படி, ஜூன் 20ம் தேதி வரை, 110 டி.எம்.சி., நீரை கர்நாடக அரசு வழங்கி இருக்க வேண்டும். ஆனால், 83.1 டி.எம்.சி., மட்டுமே கிடைத்துள்ளது. 27.7 டி.எம்.சி., நீரை கர்நாடகா நிலுவை வைத்துள்ளது. டெல்டா மாவட்டங்களில் குறுவை சாகுபடி முடியும் கட்டத்தில் உள்ளது.

சம்பா பருவ நெல் சாகுபடி காலம் துவங்க உள்ளது. இதற்கு, 60 டி.எம்.சி.,க்கு மேல் நீர் தேவை. மேட்டூர் அணையில் தற்போது, 35.6 டி.எம்.சி., நீர் மட்டுமே உள்ளது. எனவே, கர்நாடகாவிடம் இருந்து நீரை பெற வேண்டிய கட்டாயம் உள்ளது. கர்நாடகாவில் உள்ள நான்கு அணைகளில் தற்போது 102 டி.எம்.சி., நீர் கையிருப்பு உள்ளது. தென்மேற்கு பருவ மழையும் தொடர்ந்து பெய்து வருகிறது.

தமிழகத்திற்கு முறைப்படி நீரை திறக்க, காவிரி மேலாண்மை ஆணையம் இரண்டு முறை உத்தரவு பிறப்பித்தது. ஆனால், தமிழகத்திற்கு உரிய நீரை திறக்காமல், கர்நாடகா இழுத்தடித்து வருகிறது. இதனால், டெல்டா மாவட்டங்களில் சம்பா சாகுபடிக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், காவிரி நீர் முறைப்படுத்தும் குழு கூட்டம் இன்று நடக்கவுள்ளது. காவிரி மேலாண்மை ஆணைய கூட்டம் வரும் 27ம் தேதி நடக்கிறது.

இதில், தமிழகத்திற்கு உரிய நீரை திறக்காதது குறித்து, ஆணைய தலைவரிடம் கேள்வி எழுப்ப அரசு உத்தரவிட்டுள்ளது. காவிரி மேலாண்மை ஆணைய உத்தரவை மதிக்காத கர்நாடகா மீது, அடுத்தகட்ட சட்ட நடவடிக்கை எடுப்பது குறித்தும் ஆலோசிக்கப்பட்டு வருகிறது.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
RandharGuy - Kolkatta,இந்தியா
23-செப்-202114:47:56 IST Report Abuse
RandharGuy ஆட்டுக்குட்டி அண்ணாமலை என்ன பண்ணிட்டு இருக்கார்....புதுசா வீடியோ ஆடியோ ரிலீஸ் பண்ண போறரா இல்லய் சாகும்வரை கன்னட பாசம் மறைகிதா
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X