கூட்டுறவு வங்கியில் நகைக் கடன் வாங்கியோருக்கு கிடுக்கி!

Updated : செப் 23, 2021 | Added : செப் 22, 2021 | கருத்துகள் (18) | |
Advertisement
சென்னை :கூட்டுறவு வங்கிகளில் நகைக் கடன் வாங்கியோருக்கு, 'கிடுக்கிப்பிடி' உத்தரவு போடப்பட்டு உள்ளது. கடன் தள்ளுபடியை பெறுவதற்காகவே, ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள், வெவ்வேறு வங்கி கிளைகளில் நகைகளை அடமானம் வைத்து கடன் பெற்றது அம்பலமாகி உள்ளது. விதிகளை மீறி இதற்கு சாதகமாக செயல்பட்ட அதிகாரிகள் மற்றும் கடனாளிகள் மீது, சட்ட நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது. கூட்டுறவு
கூட்டுறவு வங்கி, நகைக் கடன் வாங்கியோர், கிடுக்கி!

சென்னை :கூட்டுறவு வங்கிகளில் நகைக் கடன் வாங்கியோருக்கு, 'கிடுக்கிப்பிடி' உத்தரவு போடப்பட்டு உள்ளது. கடன் தள்ளுபடியை பெறுவதற்காகவே, ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள், வெவ்வேறு வங்கி கிளைகளில் நகைகளை அடமானம் வைத்து கடன் பெற்றது அம்பலமாகி உள்ளது.

விதிகளை மீறி இதற்கு சாதகமாக செயல்பட்ட அதிகாரிகள் மற்றும் கடனாளிகள் மீது, சட்ட நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது. கூட்டுறவு துறையின் கீழ் செயல்படும் மாநில தலைமை கூட்டுறவு வங்கி, மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகள், தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்கள், நகை அடமானத்தில் கடன் வழங்குகின்றன.


கொரோனா ஊரடங்குகடன் வாங்கியதில் இருந்து ஓராண்டுக்கு மேல் வட்டி, அசல் என, எதுவும் செலுத்தவில்லை எனில், வங்கி அதிகாரிகள், வாடிக்கையாளரை தொடர்பு கொண்டு, கடனை அடைக்க அறிவுறுத்துவர். அப்படியும் செலுத்தாதபட்சத்தில், நகைகள் ஏலம் விடப்படும்.கொரோனா ஊரடங்கு, சட்டசபை தேர்தல் உள்ளிட்ட காரணங்களால், கடன் தொகை செலுத்தாத நிலையிலும், நகைகள் ஏலம் விடப்படவில்லை.
பிப்., துவக்கத்தில் தேர்தல் பிரசாரத்தின் போது, 'கூட்டுறவு வங்கிகளில், 5 சவரனுக்கு உட்பட்ட நகை கடன் தள்ளுபடி செய்யப்படும்' என, தி.மு.க., தலைவர் ஸ்டாலின் தெரிவித்தார்.இதை தொடர்ந்து, 'கூட்டுறவு நிறுவனங்களில், 6 சவரன் வரை நகைக் கடன் தள்ளுபடி செய்யப்படும்' என, பிப்., 26ல், அப்போதைய முதல்வர் பழனிசாமி அறிவித்தார். அன்று மாலை, தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால், கடன் தள்ளுபடிக்கான அரசாணை வெளியிடவில்லை.இரு கட்சிகளின் தேர்தல் வாக்குறுதிகளை நம்பி, பலரும் நகைகளை அடமானம் வைத்து, கடன் பெற்றனர்.


ஆட்சி மாற்றம்குறிப்பாக, பல குடும்பங்களில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த உறுப்பினர்கள், தள்ளுபடி சலுகைக்காகவே வெவ்வேறு கிளைகளில், 5, 6 சவரன் நகை அடகு வைத்து, கடன் பெற்றனர். இதற்கு, கூட்டுறவு வங்கி அதிகாரிகளும், சங்கங்களின் செயலர்களும் உடந்தை. ஏற்கனவே, நகைகளை அடகு வைத்தவர்களும் தள்ளுபடி சலுகையை எதிர்பார்த்து, வட்டி, அசல் செலுத்தவில்லை.ஆட்சி மாற்றம் ஏற்பட்ட நிலையில், பல்வேறு நிபந்தனைகளுடன் தகுதியானவர்களுக்கு மட்டும், 5 சவரனுக்கு உட்பட்ட நகைக் கடன் தள்ளுபடி செய்யப்படுவதாக, முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார். இதற்கு, 6,000 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.

பயனாளிகளை தேர்வு செய்வதற்கான வழிமுறை வகுக்கும் பணி நடக்கிறது. தள்ளுபடியை எதிர்பார்த்து, ஒரு ரேஷன் கார்டில் உள்ள குடும்ப உறுப்பினர்களே, வெவ்வேறு கூட்டுறவு வங்கிகளில் நகை கடன் பெற்ற விபரங்களை, கூட்டுறவு துறை கண்டறிந்துள்ளது.கடன் பெற்ற பலர், தள்ளுபடியை எதிர்பார்த்து வேண்டுமென்றே அசல், வட்டி செலுத்தாததால் வங்கிகளுக்கு நிதி நெருக்கடி ஏற்பட்டுள்ளது.இதையடுத்து, ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள், பல வங்கிகளில் கடன் பெற்ற விபரங்களை, மாவட்ட வாரியாக, கூட்டுறவு வங்கிகளுக்கு அனுப்பியுள்ள கூட்டுறவு துறை, அவர்களிடம் இருந்து கடன் தவணை தொகையை வசூலிக்குமாறு உத்தரவிட்டுள்ளது.முறைகேடுகளில் ஈடுபட்டுள்ள செயலர், அதிகாரிகள் உள்ளிட்டோர் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது.

இது குறித்து, கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர், கூட்டுறவு வங்கி அதிகாரிகளுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கை:ரேஷன் கார்டு அடிப்படையில் இடம்பெற்றுள்ள, ஒன்றுக்கு மேற்பட்ட குடும்ப உறுப்பினர்கள், ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட கூட்டுறவு நிறுவனங்களில், 5 சவரனுக்கு மேற்பட்டு கடன் பெற்றிருந்தது கண்டறியப்பட்டு உள்ளது.இதேபோன்று, 'ஆதார்' எண் அடிப்படையில், ஒன்றுக்கு மேற்பட்ட குடும்ப உறுப்பினர்கள், ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட கூட்டுறவு நிறுவனங்களில், 5 சவரனுக்கு மேற்பட்டு, நகை கடன் பெற்றது தெரிய வந்துள்ளது.
மாவட்டம் வாரியாக, கடன்தாரர்கள் விபரங்கள் மின்னஞ்சலில் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

மேலும், ஆதார் எண், ரேஷன் கார்டு அடிப்படையிலும், ஒன்றுக்கு மேற்பட்ட மாவட்டங்களில் கடன் பெற்றவர்களின் பட்டியலும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.அதன்படி, ஐந்து சவரனுக்கு மேல் நகை கடன்கள் பெற்றவர்களிடம் இருந்து, கடன் தவணையை வசூல் செய்ய வேண்டும். தவணை தவறி இருப்பின், உரிய சட்டபூர்வ நடவடிக்கைகளை பின்பற்றி, கடன் தொகையை வசூலிக்க வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Advertisement
வாசகர் கருத்து (18)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
S. Narayanan - Chennai,இந்தியா
23-செப்-202122:48:11 IST Report Abuse
S. Narayanan நடவடிக்கை என்றால் நமக்கு தான் தெரியுமே அமைச்சர்கள் அதிகாரிகள் மூலம் லஞ்சம் பெற்றுக்கொண்டு அதை எப்படி சரி செய்ய வேண்டுமோ அப்படி செய்து விடுவார்கள். மூவருக்கும் ஜாக்பாட் தான். விடியல் ஆரம்பம் ஆகப்போகிறது.
Rate this:
Cancel
23-செப்-202119:08:32 IST Report Abuse
முருகன் மக்களின் போரசை பெரும் நஷ்டம் என்பதே உண்மை. அரசு சரியான நடவடிக்கை எடுத்துள்ளது.
Rate this:
Cancel
Nithya - Chennai,இந்தியா
23-செப்-202118:06:59 IST Report Abuse
Nithya Thiruttuthanam pannuvadhil vallavargal palar ingu ullanar ru therigiradhu ...Indha free. Concept olithal mattume naadu urupadum...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X