பொது செய்தி

தமிழ்நாடு

தினமும் 2 சங்கத்தில் ஆய்வு பதிவுத்துறை அதிரடி உத்தரவு

Added : செப் 22, 2021
Share
Advertisement
சென்னை:வரவு - செலவு கணக்குகளை முறையாக தாக்கல் செய்யாதது தொடர்பாக, தினமும் இரண்டு சங்கங்களை ஆய்வு செய்ய பதிவுத் துறை உத்தரவிட்டுள்ளது.தமிழகத்தில் கல்வி, கலாசாரம், விளையாட்டு மேம்பாட்டு பணிகளுக்காக, மக்கள் தங்களுக்குள் ஒன்று சேர்ந்து சங்கங்களை துவக்குகின்றனர். இவ்வாறு துவங்கப்படும் சங்கங்கள், தமிழ்நாடு சங்கங்கள் பதிவு சட்டம், 1975ன் கீழ் பதிவு செய்யப்படுகின்றன.

சென்னை:வரவு - செலவு கணக்குகளை முறையாக தாக்கல் செய்யாதது தொடர்பாக, தினமும் இரண்டு சங்கங்களை ஆய்வு செய்ய பதிவுத் துறை உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் கல்வி, கலாசாரம், விளையாட்டு மேம்பாட்டு பணிகளுக்காக, மக்கள் தங்களுக்குள் ஒன்று சேர்ந்து சங்கங்களை துவக்குகின்றனர். இவ்வாறு துவங்கப்படும் சங்கங்கள், தமிழ்நாடு சங்கங்கள் பதிவு சட்டம், 1975ன் கீழ் பதிவு செய்யப்படுகின்றன. இவற்றின் செயல்பாடுகளை, சங்கங்களுக்கான மாவட்ட பதிவாளர் கண்காணித்து வருவார்.

இந்த சங்கங்கள், ஆண்டுக்கு ஒரு முறை பொதுக்குழு கூட்டத்தை நடத்தி, வரவு - செலவு கணக்கு விபரங்களை தாக்கல் செய்ய வேண்டும். இதன் அடிப்படையில், இந்த சங்கங்களின் பதிவு புதுப்பிக்கப்படும்.தற்போதைய நிலவரப்படி, 2.14 லட்சம் சங்கங்களில், 50 சதவீத சங்கங்கள் முறையாக புதுப்பிக்கப்படாமல் இருப்பதாக கூறப்படுகிறது.

இது குறித்து, பதிவுத் துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:வரவு - செலவு கணக்கு விபரங்களை தாக்கல் செய்து, புதுப்பிக்காத சங்கங்களை ஆய்வு செய்யும் பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளன. இதன்படி, சீட்டு, சங்க பணிக்கான சார் - பதிவாளர்கள், தினமும் இரண்டு சங்கங்களை ஆய்வு செய்ய உத்தரவிடப்பட்டுஉள்ளது.

சங்கங்கள் இருக்கும் இடத்துக்கு நேரில் சென்று, பெயர் பலகை, அலுவலகம் இருக்கிறதா என்பதில் துவங்கி, நிர்வாகிகள் தேர்வு, வரவு - செலவு கணக்கு விபரங்கள் வரை அனைத்தையும் ஆய்வு செய்ய வேண்டும். இது குறித்த அறிக்கை அடிப்படையில், முறையாக செயல்படாத சங்கங்கள் கலைக்கப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X