பருவ மழையை எதிர்கொள்ள தயார் நிலை பொதுப்பணித்துறை செயலர் தகவல்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

பருவ மழையை எதிர்கொள்ள தயார் நிலை பொதுப்பணித்துறை செயலர் தகவல்

Added : செப் 22, 2021
Share
சென்னை:''வடகிழக்கு பருவ மழையையொட்டி, அனைத்து நீர் நிலைகளையும் ஆய்வு செய்யும் பணி நடந்து வருகிறது,'' என, பொதுப்பணித்துறை செயலர் சந்தீப் சக்சேனா தெரிவித்தார்.தலைமைச் செயலகத்தில் அவர் அளித்த பேட்டி:தமிழகம் வடகிழக்கு பருவமழையை எதிர்நோக்கி உள்ளதால், அனைத்து நீர்நிலைகளும் உறுதியான நிலையில் உள்ளதை உறுதி செய்வது அவசியம்.எனவே, நீர்வளத்துறை செயற்பொறியாளர்கள் அனைத்து

சென்னை:''வடகிழக்கு பருவ மழையையொட்டி, அனைத்து நீர் நிலைகளையும் ஆய்வு செய்யும் பணி நடந்து வருகிறது,'' என, பொதுப்பணித்துறை செயலர் சந்தீப் சக்சேனா தெரிவித்தார்.

தலைமைச் செயலகத்தில் அவர் அளித்த பேட்டி:தமிழகம் வடகிழக்கு பருவமழையை எதிர்நோக்கி உள்ளதால், அனைத்து நீர்நிலைகளும் உறுதியான நிலையில் உள்ளதை உறுதி செய்வது அவசியம்.எனவே, நீர்வளத்துறை செயற்பொறியாளர்கள் அனைத்து அணைகள், ஆறுகள், ஏரிகள் மற்றும் நீர் நிலைகளின் கரைகளில் நடந்து சென்று ஆய்வு செய்து, உடைப்பு ஏற்படாத வகையில் உரிய நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.


அறிக்கை

அணைகள் மற்றும் ஏரிகளின் கதவுகள், மதகுகள் சரியாக இயங்குவதை செயற்பொறியாளர்கள் உறுதி செய்வதோடு, உரிய புகைப்படங்களுடன் அக்.,10க்குள் அறிக்கை அனுப்ப அறிவுறுத்தப் பட்டுள்ளது.வெள்ள நீர் வடிகால்களில் உள்ள இயற்கை தாவரங்கள், மிதக்கும் குப்பை, கட்டடக் கழிவுகள் ஆகியவற்றை, பருவமழைக்கு முன் அகற்ற உத்தரவிடப்பட்டுள்ளது.


சிறப்பு செயல் திட்டம்

சாலைகள் மற்றும் குடியிருப்பு பகுதிகளில், மழை நீர் தேங்காத வகையில், மழை நீர் வடிகால்களை துார்வாரி, மழை நீர் தடையின்றி வடிய, மண்டல அளவில் சிறப்பு செயல் திட்டம் தயார் செய்யப்பட்டு, நடவடிக்கை எடுக்கப் பட்டு வருகிறது.அனைத்து துறைகளையும் ஒருங்கிணைத்து கூட்டம் நடத்தி, முன்னேற்பாடு பணிகளை மேற்கொள்ள, மாவட்ட கலெக்டர்களுக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.

நீர்வளத் துறையின் மண்டல தலைமை பொறியாளர்கள், குழுக்கள் அமைத்து, அனைத்து நீர் நிலைகளையும் கண்காணிக்க அறிவுறுத்தப்பட்டு உள்ளனர்.கன மழையின்போது, 24 மணி நேரமும், பணியாளர்கள் அமர்த்தப்பட்டு, நீர்த்தேக்கங்கள் மற்றும் நீர் நிலைகளில் நீர் வரத்து, நீர் இருப்பு கண்காணித்து, உடனுக்குடன் உயர் அலுவலர்களுக்கு தகவல் அனுப்ப அறிவுறுத்தப் பட்டு உள்ளது.


துார் வாரும் பணி

மாநகராட்சி மற்றும் நகராட்சிகளில், மண்டல வாரியாக, மழை நீர் வடிகால்களை சரி செய்ய, நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. நீர் நிலைகளை துார் வாரும் பணி போன்றவற்றை, மழைக்கு முன் முடிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.பொதுப்பணித்துறை சார்பில், கட்டடங்களின் உறுதித்தன்மையை ஆய்வு செய்யும் பணி நடந்து வருகிறது. அனைத்து துறைகளும் இணைந்து செயல்படும் வகையில், திட்டம் தயாரிக்கப்பட்டுஉள்ளது. இம்முறை எந்த பிரச்னையும் ஏற்படாமல் இருக்க, நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

காவிரி நீர் மேலாண்மை ஆணைய கூட்டம், வரும் 27ம் தேதி நடக்க உள்ளது. இரு மாநிலங்களுக்கான நதி நீர் பிரச்னையில், விரைவில் நல்ல தீர்வு கிடைக்கும் என்ற நம்பிக்கை உள்ளது. முல்லை பெரியாறு அணை நீர் மட்டத்தை 152 அடியாக உயர்த்த பேச்சு நடந்து வருகிறதுஇவ்வாறு அவர் தெரிவித்தார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X