தவான், ஸ்ரேயாஸ் அபாரம்; டில்லி அணி கலக்கல் வெற்றி

Updated : செப் 22, 2021 | Added : செப் 22, 2021 | கருத்துகள் (2)
Share
Advertisement
துபாய்: ஐதராபாத் அணிக்கு எதிரான ஐ.பி.எல்., லீக் போட்டியில் ஷிகர் தவான், ஸ்ரேயாஸ் அபார ஆட்டத்தை வெளிப்படுத்த டில்லி அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.எமிரேட்சில், ஐ.பி.எல்., 14வது சீசன் நடக்கிறது. துபாயில் நடந்த லீக் போட்டியில் வில்லியம்சன் தலைமையிலான ஐதராபாத் அணி, ரிஷாப் பன்ட் வழிநடத்தும் டில்லி அணியை சந்தித்தது. 'டாஸ்' வென்ற ஐதராபாத் அணி கேப்டன்
IPL 2021, DC vs SRH, IPLt20

துபாய்: ஐதராபாத் அணிக்கு எதிரான ஐ.பி.எல்., லீக் போட்டியில் ஷிகர் தவான், ஸ்ரேயாஸ் அபார ஆட்டத்தை வெளிப்படுத்த டில்லி அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

எமிரேட்சில், ஐ.பி.எல்., 14வது சீசன் நடக்கிறது. துபாயில் நடந்த லீக் போட்டியில் வில்லியம்சன் தலைமையிலான ஐதராபாத் அணி, ரிஷாப் பன்ட் வழிநடத்தும் டில்லி அணியை சந்தித்தது. 'டாஸ்' வென்ற ஐதராபாத் அணி கேப்டன் வில்லியம்சன் 'பேட்டிங்' தேர்வு செய்தார்.


வார்னர் ஏமாற்றம்:


ஐதராபாத் அணிக்கு டேவிட் வார்னர் (0) மோசமான துவக்கம் தந்தார். விரிதிமன் சகா (18), கேப்டன் கேன் வில்லியம்சன் (18), மணிஷ் பாண்டே (17) நிலைக்கவில்லை. கேதர் ஜாதவ் (3), ஜேசன் ஹோல்டர் (10) சொற்ப ரன்னில் அவுட்டாகினர். அப்துல் சமத் (28), ரஷித் கான் (22) ஆறுதல் தந்தனர். சந்தீப் சர்மா (0) ஏமாற்றினார். ஐதராபாத் அணி 20 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 134 ரன் எடுத்தது. புவனேஷ்வர் குமார் (5) அவுட்டாகாமல் இருந்தார். டில்லி அணி சார்பில் ரபாடா 3 விக்கெட் வீழ்த்தினார்.


தவான் அபாரம்:


எட்டக்கூடிய இலக்கை விரட்டிய டில்லி அணிக்கு பிரித்வி ஷா, ஷிகர் தவான் ஜோடி துவக்கம் தந்தது. புவனேஷ்வர் குமார் வீசிய 2வது ஓவரில் 2 பவுண்டரி அடித்தார் தவான். கலீல் அகமது வீசிய 3வது ஓவரில் 2 பவுண்டரி விரட்டிய பிரித்வி (11), அதே ஓவரில் அவுட்டானார். ரஷித் கான் பந்தை சிக்சருக்கு அனுப்பிய தவான், சந்தீப் சர்மா வீசிய 10வது ஓவரில் தொடர்ச்சியாக 2 பவுண்டரி விளாசினார். இவருக்கு ஒத்துழைப்பு தந்த ஸ்ரேயாஸ் ஐயர், ரஷித் கான் பந்தில் தன்பங்கிற்கு ஒரு சிக்சர் பறக்கவிட்டார். இரண்டாவது விக்கெட்டுக்கு 52 ரன் சேர்த்த போது ரஷித் கான் 'சுழலில்' தவான் (42) சிக்கினார்.


latest tamil news


சந்தீப் சர்மா வீசிய 14வது ஓவரில் 2 பவுண்டரி அடித்தார் ஸ்ரேயாஸ். புவனேஷ்வர் பந்தை சிக்சருக்கு அனுப்பிய கேப்டன் ரிஷாப் பன்ட், கலீல் அகமது வீசிய 17வது ஓவரில் தொடர்ச்சியாக ஒரு பவுண்டரி, ஒரு சிக்சர் விளாசினார். ஹோல்டர் பந்தை சிக்சருக்கு அனுப்பிய ஸ்ரேயாஸ் வெற்றியை உறுதி செய்தார்.

டில்லி அணி 17.5 ஓவரில் 2 விக்கெட்டுக்கு 139 ரன் எடுத்து வெற்றி பெற்றது. ஸ்ரேயாஸ் (47), ரிஷாப் பன்ட் (35) அவுட்டாகாமல் இருந்தனர். ஐதராபாத் சார்பில் கலீல் அகமது, ரஷித் கான் தலா ஒரு விக்கெட் கைப்பற்றினர்.

Advertisement




வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
SUNDAR - chennai,இந்தியா
23-செப்-202109:36:35 IST Report Abuse
SUNDAR அவரது முழு பெயரே ஸ்ரேயாஸ் ஐயர் என்பது ஆகும். அவர் தமிழர் அல்லர். அவ்வாறு இருக்க அவரது பெயரை சுறுக்குவதற்கு தங்கள் யார்?
Rate this:
Cancel
Krish Gopal - Fremont,யூ.எஸ்.ஏ
23-செப்-202103:55:09 IST Report Abuse
Krish Gopal ஸ்ரேயாஸ் ஐயர் என்று சொல்ல ஏன் கூச்சம் / வெட்கம்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X