தமிழ்நாடு

மழைநீர் சேகரிப்பு இல்லாத வீடுகளுக்கு நோட்டீஸ்; மழைநீரை முழுமையாக சேகரிக்க திட்டம்

Added : செப் 22, 2021
Share
Advertisement
ராமநாதபுரம் : ராமநாதபுரம் நகரில் மழைநீர் சேகரிப்பு இல்லாத வீடுகளுக்கு நோட்டீஸ் வழங்கப்படுகிறது. மேலும் மழைநீரை முழுமையாக ஊரணியில் சேகரிக்க 50 கி.மீ., வரை தெரு, ரோடுகளில் வரத்து வாய்க்கால் ஆக்கிரமிப்புகளை அகற்றி செப்பனிடும் பணியை நகராட்சி நிர்வாகம் தொடங்கியுள்ளது.ராமநாதபுரத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்க உள்ளது. கடந்த சில நாட்களாக அவ்வப்போது மழை பெய்கிறது. மழைநீர்

ராமநாதபுரம் : ராமநாதபுரம் நகரில் மழைநீர் சேகரிப்பு இல்லாத வீடுகளுக்கு நோட்டீஸ் வழங்கப்படுகிறது. மேலும் மழைநீரை முழுமையாக ஊரணியில் சேகரிக்க 50 கி.மீ., வரை தெரு, ரோடுகளில் வரத்து வாய்க்கால் ஆக்கிரமிப்புகளை அகற்றி செப்பனிடும் பணியை நகராட்சி நிர்வாகம் தொடங்கியுள்ளது.


ராமநாதபுரத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்க உள்ளது. கடந்த சில நாட்களாக அவ்வப்போது மழை பெய்கிறது. மழைநீர் செல்லும் வரத்து வாய்க்கால் செப்பனிடப்படாமல் உள்ளதால் ரோடு, வீதிகளில் தண்ணீர் தேங்குவது வாடிக்கையாகியுள்ளது. இதனையடுத்து நகராட்சி சார்பில் வீடுகள், கடைகளில் மழைநீர் சேகரிப்பு அமைக்க வலியுறுத்தி நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது.

பல அரசு கட்டடங்களில் உள்ள மழைநீர் சேகரிப்பு போதிய பராமரிப்பின்றி காணப்படுகிறது. அந்த கட்டடங்களும் கணக்கெடுக்கப்பட்டு அவற்றை சீரமைக்க நகராட்சி நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது. மழைநீர் சேகரிப்பை ஏற்படுத்தாத வீடுகள், கல்வி நிறுவனங்கள், வணிக நிறுவனங்களுக்கு நோட்டீஸ் கொடுக்கப்படுகிறது.

நகரில் மழைநீர் அதிகளவில் தேங்கும் பகுதிகளை கண்டறிந்து வரத்து வாய்க்கால்களை துார்வாரி சுத்தம் செய்யும் பணியை நகராட்சி தொடங்கியுள்ளது.நகராட்சி கமிஷனர்(பொ) நீலேஸ்வரர் கூறுகையில், மழைபெய்தால் ரோடு,வீதிகளில் தண்ணீர் தேங்காத வகையில் வரத்து வாய்க்கால் 50 கி.மீ., துாரம் அளவிற்கு சுத்தம் செய்ய உள்ளோம். இப்பணியில் 50க்கும் மேற்பட்டவர்கள் ஈடுபட்டுள்ளனர்,'என்றார்.-----------

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X