விவசாயிகள் போராட்டம் 300 நாட்களை கடந்தது

Added : செப் 22, 2021
Share
Advertisement
புதுடில்லி:வேளாண் சட்டங்களை எதிர்த்து, டில்லியில் விவசாயிகள் நடத்தும் போராட்டம் நேற்று 300வது நாளை நிறைவு செய்தது.மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களை, பஞ்சாப் உள்ளிட்ட பல்வேறு மாநில விவசாய சங்கத்தினர் கடுமையாக எதிர்த்து வருகின்றனர்.இந்த சட்டங்களை ரத்து செய்யக்கோரி, டில்லியின் எல்லையில் அவர்கள் நடத்தும் தொடர் போராட்டம் நேற்றுடன் 300 நாட்களை நிறைவு செய்துள்ளது.

புதுடில்லி:வேளாண் சட்டங்களை எதிர்த்து, டில்லியில் விவசாயிகள் நடத்தும் போராட்டம் நேற்று 300வது நாளை நிறைவு செய்தது.

மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களை, பஞ்சாப் உள்ளிட்ட பல்வேறு மாநில விவசாய சங்கத்தினர் கடுமையாக எதிர்த்து வருகின்றனர்.இந்த சட்டங்களை ரத்து செய்யக்கோரி, டில்லியின் எல்லையில் அவர்கள் நடத்தும் தொடர் போராட்டம் நேற்றுடன் 300 நாட்களை நிறைவு செய்துள்ளது.

இதுகுறித்து, போராட்டத்தை வழிநடத்தும் சம்யுக்த கிசான் மோர்ச்சா அமைப்பின் அறிக்கை: டில்லி எல்லையில், லட்சக்கணக்கான விவசாயிகள் அமைதியான முறையில் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.வேளாண் சட்டங்களை ரத்து செய்யக்கோரும் இந்த அறப்போர் 300 நாட்களை கடந்துள்ளது.

எங்கள் கோரிக்கைகள் மத்திய அரசுக்கு தெளிவாக தெரிந்தாலும், அவற்றை ஏற்றுக்கொள்ள மறுக்கிறது. எனவே ஏற்கும் வரை போராட்டம் தொடரும்.எங்கள் தரப்பில் வரும் 27ம் தேதி 'பாரத் பந்த்' நடத்த அழைப்பு விடுத்துள்ளோம். அதற்கான பணிகளை தீவிரமாக மேற்கொண்டு வருகிறோம்.இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X