பொது செய்தி

தமிழ்நாடு

உள்ளாட்சி பதவிகள் ஏலம் கலெக்டர்களிடம் விபரம் கேட்பு

Added : செப் 22, 2021
Share
Advertisement
சென்னை:'மனு தாக்கல் நடக்காத இடங்கள், ஒரு மனு மட்டும் பெறப்பட்ட இடங்கள், உள்ளாட்சி பதவிகள் ஏலம் விடப்படுவதாக வரும் புகார்கள் தொடர்பாக எடுத்த நடவடிக்கை விபரங்களை அளிக்க வேண்டும்' என, மாவட்ட கலெக்டர்களுக்கு, தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுஉள்ளது.ஊரக உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக, ஒன்பது மாவட்ட கலெக்டர்களுடன், மாநில தேர்தல் கமிஷனர் பழனிகுமார், செயலர் சுந்தரவல்லி மற்றும்

சென்னை:'மனு தாக்கல் நடக்காத இடங்கள், ஒரு மனு மட்டும் பெறப்பட்ட இடங்கள், உள்ளாட்சி பதவிகள் ஏலம் விடப்படுவதாக வரும் புகார்கள் தொடர்பாக எடுத்த நடவடிக்கை விபரங்களை அளிக்க வேண்டும்' என, மாவட்ட கலெக்டர்களுக்கு, தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுஉள்ளது.

ஊரக உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக, ஒன்பது மாவட்ட கலெக்டர்களுடன், மாநில தேர்தல் கமிஷனர் பழனிகுமார், செயலர் சுந்தரவல்லி மற்றும் அதிகாரிகள், 'வீடியோ கான்பரன்ஸ்' வாயிலாக நேற்று ஆலோசனை நடத்தினர். மாவட்ட தலைமை அலுவலகங்களில், புகார் பிரிவு அமைக்க வேண்டும். தேர்தல் கமிஷன் இணையதளத்தில் மனு தாக்கல் முதல், தேர்தல் முடிவுகள் வரையிலான விபரங்கள் பதிவேற்றம் செய்யப்பட வேண்டும்.

மனு தாக்கல் நடக்காத இடங்கள், ஒரு மனு மட்டும் பெறப்பட்ட இடங்கள், உள்ளாட்சி பதவிகள் ஏலம் விடப்படுவதாக வரும் புகார்கள் தொடர்பாக, எடுத்த நடவடிக்கை விபரங்களை தெரிவிக்க வேண்டும். தேர்தல் நேர்மையாகவும், ஜனநாயக முறையிலும் நடப்பதை உறுதி செய்ய, அனைத்து நடவடிக்கைகளும் எடுக்க வேண்டும் என, மாவட்ட கலெக்டர்களுக்கு அறிவுறுத்தப் பட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X