சம்பவம் செய்தி

தமிழ்நாடு

பயங்கரவாதிகளுக்கு போதை 'சப்ளை' ஆந்திர ஜோடி குறித்து விசாரணை

Updated : செப் 22, 2021 | Added : செப் 22, 2021
Share
Advertisement
சென்னை:தலிபான்களிடம் இருந்து, 21 ஆயிரம் கோடி மதிப்புள்ள, 3,000 கிலோ போதை பொருளை கடத்திய வழக்கில், சென்னையில் கைது செய்யப்பட்ட ஆந்திர தம்பதிக்கு, பயங்கரவாதிகளுடன் தொடர்பு உள்ளதா என்ற கோணத்தில், போலீசார் விசாரித்து வருகின்றனர்.தெற்காசிய நாடான ஆப்கானிஸ்தானில் இருந்து, தலிபான் பயங்கரவாதிகள் உதவியுடன், ஈரான் வழியாக குஜராத் துறைமுகத்திற்கு, சரக்கு கப்பலில் பல கோடி ரூபாய்
 பயங்கரவாதிகளுக்கு போதை 'சப்ளை'  ஆந்திர ஜோடி குறித்து விசாரணை

சென்னை:தலிபான்களிடம் இருந்து, 21 ஆயிரம் கோடி மதிப்புள்ள, 3,000 கிலோ போதை பொருளை கடத்திய வழக்கில், சென்னையில் கைது செய்யப்பட்ட ஆந்திர தம்பதிக்கு, பயங்கரவாதிகளுடன் தொடர்பு உள்ளதா என்ற கோணத்தில், போலீசார் விசாரித்து வருகின்றனர்.

தெற்காசிய நாடான ஆப்கானிஸ்தானில் இருந்து, தலிபான் பயங்கரவாதிகள் உதவியுடன், ஈரான் வழியாக குஜராத் துறைமுகத்திற்கு, சரக்கு கப்பலில் பல கோடி ரூபாய் மதிப்புள்ள போதை பொருள் கடத்தல் நடப்பதாக, மத்திய வருவாய் புலனாய்வு துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது.


ரகசிய கண்காணிப்பு

இதையடுத்து, சில தினங்களுக்கு முன், குஜராத் மாநிலம், முந்த்ரா துறைமுகத்தில், போதை பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு அதிகாரிகளுடன் சேர்ந்து, ஈரானில் இருந்து வந்த கன்டெய்னர்களில் சோதனையிட்டனர். இதில், இரண்டு கன்டெய்னரில் முக பவுடர் பார்சல்களுடன், 21 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள, 2,988 கிலோ ஹெராயின் கடத்தி வரப்பட்டது தெரிய வந்தது.

பார்சலில், விஜயவாடா சத்தியநாராயணபுரத்தில் உள்ள, 'ஆஷி டிரேடிங் கம்பெனி' பெயர் எழுதப்பட்டு இருந்தது. இதையடுத்து, அந்த கம்பெனியை சுற்றி ரகசிய கண்காணிப்பில் ஈடுபட்டனர். விசாரணையில், அந்த கம்பெனியை, மச்சாவரம் சுதாகர் மற்றும் இவரது மனைவி கோவிந்தராஜு துர்கா பூரண வைஷாலி ஆகியோர் நடத்தி வருவது தெரியவந்தது.

தொடர் விசாரணையில், இவர்கள், சென்னை மாங்காடு அருகே, கொளப்பாக்கம், வ.உ.சி., தெருவில் உள்ள, அடுக்குமாடி குடியிருப்பில், முதல் மாடியில் வசித்து வருவது தெரிய வந்தது. இதையடுத்து, இருவரையும் கைது செய்து, குஜராத் சிறையில் அடைத்துள்ளனர். இவர்களை, 10 நாட்கள் காவலில் எடுத்தும் விசாரித்து வருகின்றனர்.

சர்வதேச அளவில் போதை பொருள் கடத்தலில் ஈடுபட்ட தம்பதி குறித்து, தமிழக போலீசார், மத்திய - மாநில போதை பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாரும் விசாரித்து வருகின்றனர்.


யார் இவர்கள்?

இந்த தம்பதி குறித்து, போலீசார் கூறியதாவது:மச்சாவரம் சுதாகர், பள்ளி மற்றும் கல்லுாரி படிப்பை, விஜயவாடாவில் முடித்துள்ளார். திருமணத்திற்கு பின், சென்னை, கொளப்பாக்கம், வ.உசி., தெருவில், 29 குடியிருப்புகள் கொண்ட, 'கோவர்த்தனகிரி' என்ற அடுக்குமாடி குடியிருப்பில், முதல் தளத்தில் ஏழு ஆண்டுகளாக வாடகைக்கு வசிக்கின்றனர்.

இவர்களுக்கு, 10 வயது மகளும், 6 வயதில் மகனும் உள்ளனர்.சுதாகர், மிகவும் பிரபலமான சரக்கு போக்குவரத்து நிறுவனத்தில் மேலாளராக பணிபுரிந்து அனுபவம் பெற்றுள்ளார். இவர்கள், ஆந்திரா, உ.பி., என, பல மாநிலங்களில், பல்வேறு பெயர்களில் கம்பெனிகளை பதிவு செய்துள்ளனர். இந்த கம்பெனிகள் உண்மையிலேயே உள்ளதா என்பது குறித்து விசாரித்து வருகிறோம்.

'சுதாகர் ஆஷி சோலார் சிஸ்டம்' என்ற நிறுவனத்தையும் நடத்தி வருகின்றனர்.சுதாகர், இதற்கு முன் சென்னை துறைமுகம் வழியாக, போதை பொருள் கடத்தலில் ஈடுபட்டாரா; தமிழகம் உட்பட, தென் மாநிலங்களிலும் அதிகரித்து வரும் பயங்கரவாதிகளுக்கும் தொடர்பு உள்ளதா; இவர்களுக்கு போதை பொருள் 'சப்ளை' செய்தனரா என்ற கோணத்தில் விசாரித்து வருகிறோம்.இவ்வாறு அவர்கள் கூறினர்.


'ரொம்ப நல்லவங்க...'



சுதாகர், வைஷாலி பக்கத்து வீடுகளில் வசிப்போர் கூறியதாவது:சுதாகர், வைஷாலி ஆகியோர், போதை பொருள் கடத்தலில் ஈடுபடுபவர்கள் போல தெரியவில்லை. மிகவும் நல்லவர்கள் போல இருந்தனர். அவர்களின் வீட்டில், அதிகாலையிலேயே பூஜை செய்வர். அவர்களுக்கு பக்தி அதிகம். இவர்கள் சர்வதேச போதை பொருள் கடத்தல்காரர்களா என, எங்களால் நம்பவே
முடியவில்லை.

ஆடம்பரமாக இல்லாமல் மிகவும் எளிமையாக வசித்தனர். அவர்கள் வீட்டில், இரவு முழுதும், 10க்கும் மேற்பட்ட போலீசார் விசாரித்து, மறுநாள் மதியம் 12:00 மணிக்கு அழைத்துச் சென்றனர்.
குழந்தைகள் மட்டும் இங்கேயே இருந்தனர். அவர்களை, வைஷாலியின் சகோதரர் அழைத்துச் சென்றார்.இவ்வாறு அவர்கள் கூறினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X