எக்ஸ்குளுசிவ் செய்தி

தமிழ்நாடு

16 ஆயிரம் டன் பால் பவுடர் 5,122 டன் வெண்ணெய் தேக்கம்: தினமும் ரூ.32 லட்சம் கடனில் தவிக்கும் ஆவின்

Updated : செப் 23, 2021 | Added : செப் 22, 2021 | கருத்துகள் (17)
Share
Advertisement
சென்னை : ஆவின் நிறுவனத்தில், 16 ஆயிரம் டன் பால் பவுடர் தேக்கம் அடைந்துள்ளதால், நாள்தோறும் 32 லட்சம் ரூபாய் நஷ்டம் ஏற்படுகிறது.மாநிலம் முழுதும், 9,000 பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கங்கள் உள்ளன. இவற்றின் வாயிலாக நாள்தோறும், 40 லட்சம் லிட்டர் பால் கொள்முதல் செய்யப்படுகிறது. இந்த பாலை, மதிப்பு கூட்டப்பட்ட பொருட்களாக மாற்றி, ஆவின் நிறுவனம் விற்பனை செய்து வருகிறது. சென்னையில், 12
பால் பவுடர்,வெண்ணெய், தேக்கம், கடன், ஆவின்,

சென்னை : ஆவின் நிறுவனத்தில், 16 ஆயிரம் டன் பால் பவுடர் தேக்கம் அடைந்துள்ளதால், நாள்தோறும் 32 லட்சம் ரூபாய் நஷ்டம் ஏற்படுகிறது.

மாநிலம் முழுதும், 9,000 பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கங்கள் உள்ளன. இவற்றின் வாயிலாக நாள்தோறும், 40 லட்சம் லிட்டர் பால் கொள்முதல் செய்யப்படுகிறது.
இந்த பாலை, மதிப்பு கூட்டப்பட்ட பொருட்களாக மாற்றி, ஆவின் நிறுவனம் விற்பனை செய்து வருகிறது. சென்னையில், 12 லட்சம் லிட்டர் உட்பட மாநிலம் முழுதும் நாள்தோறும், 26 லட்சம் லிட்டர் பால் விற்கப்படுகிறது.


தி.மு.க., அரசு பொறுப்பேற்றதும், ஆவின் பால் விலை லிட்டருக்கு, 3 ரூபாய் குறைக்கப்பட்டது. இதனால், ஒரு மாதம் வரை விற்பனை அதிகமாக இருந்தது. தற்போது, விற்பனை பழைய நிலைக்கு திரும்பி விட்டது. அதே நேரத்தில், பால் கொள்முதல் வழக்கமான நிலையில் உள்ளது. தனியார் நிறுவனங்களிடம், 1 லிட்டர், 20 - 22 ரூபாய்க்கு, கூட்டுறவு சங்கங்களால் கொள்முதல் செய்யப்படுகிறது.

விவசாயிகளிடம் லிட்டருக்கு, 30 - 32 ரூபாய்க்கு கொள்முதல் செய்யப்படுவதாக கணக்கு காட்டப்படுகிறது. விற்பனைக்கும் அதிகமாக கொள்முதல் செய்யப்படும் பால், பலவகை பொருட்களாக மதிப்பு கூட்டப்படுகிறது. நாள்தோறும் 12 லட்சம் லிட்டர் பால், பவுடராக மாற்றப்படுகிறது.
ஆவின் நிறுவனத்திற்கு நாள்தோறும், 8 டன் பால் பவுடர் தேவைப்படும் நிலையில், 32 டன் பால் பவுடர் கூடுதலாக உற்பத்தி செய்யப்படுகிறது. இதனால், ஆவின் நிறுவனத்தில் பால் பவுடர் தேக்கம் அதிகரித்துள்ளது. தற்போதைய நிலவரப்படி, 16 ஆயிரம் டன் பால் பவுடர், 5,122 டன் வெண்ணெய் கையிருப்பில் உள்ளது.இதில், 1 கிலோ பால் பவுடருக்கு 310 ரூபாய் உற்பத்தி செலவாகிறது. ஆனால், பால் பவுடர் 10 மாதங்களுக்கு மேல் தேக்கம் அடைந்துள்ளதை காரணம் கூறி, 1 கிலோ 200 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.இதனால், ஆவின் நிறுவனத்திற்கு நாள்தோறும் உத்தேசமாக 32 லட்சம் ரூபாய் நஷ்டம் ஏற்பட்டு வருகிறது.இதை சரி செய்ய வழி தெரியாமல், ஆவின் அதிகாரிகள் திணறி வருகின்றனர். விவசாயிகள், பொது மக்களிடம் இருந்து வாங்குவதாக கணக்கு காட்டிவிட்டு, தனியாரிடம் இருந்து அதிகளவில் பால் கொள்முதல் செய்வதே இதற்குக் காரணம். இச்செயலில் ஈடுபடும் சங்கங்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இப்பிரச்னையை சரி செய்யாத பட்சத்தில், ஆவின் நிறுவனம் பல கோடி ரூபாய் கடனில் சிக்கி சீரழியும் ஆபத்து வாய்ப்புள்ளது. இதேபோல, மதிப்பு கூட்டப்பட்ட பொருட்கள் விற்பனையை அதிகரிப்பதற்கான முயற்சிகளையும் மேற்கொள்ள வேண்டும்.

Advertisement
வாசகர் கருத்து (17)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
ஏகன் ஆதன் - கிண்ணிமங்கலம்,இந்தியா
24-செப்-202119:57:07 IST Report Abuse
ஏகன் ஆதன் மது குடித்து வரி கட்டி இலவசம் கொடுத்து உதவும் நல்ல உள்ளங்கள் இறந்தால், இலவசமாக பால் ஊற்றுவதற்கு தமிழக அரசு ஏற்பாடு செய்ய வேண்டும்
Rate this:
Cancel
unmaitamil - seoul,தென் கொரியா
24-செப்-202119:46:05 IST Report Abuse
unmaitamil விடியல் அரசு வந்தது எல்லாவற்றயும் மூடுவிழா நடத்தத்தானு மக்களுக்கு விரைவில் புரியும். அதோடு இவர்கள் கட்சியும் மூடுவிழா காணும். இது காலத்தின் கட்டாயம்.
Rate this:
Cancel
Natarajan Ramanathan - தேவகோட்டை,இந்தியா
24-செப்-202118:00:58 IST Report Abuse
Natarajan Ramanathan Nasser is total waste. Better to give Aavin to Amul management. That's the only best way to survive.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X