பொது செய்தி

தமிழ்நாடு

தொழிற்கல்வியில் அரசு பள்ளி மாணவர் முருகேசன் கமிட்டி அறிக்கை வெளியீடு

Added : செப் 23, 2021
Share
Advertisement
சென்னை:தொழிற்கல்வி படிப்புகளில், அரசு பள்ளி மாணவர்களுக்கான, 7.5 சதவீத இட ஒதுக்கீடு குறித்து, நீதிபதி முருகேசன் கமிட்டியின் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.அரசு பள்ளி மாணவர்களுக்கு, தொழிற்கல்வி படிப்புகளில் இட ஒதுக்கீடு வழங்குவது குறித்து ஆய்வு செய்ய, ஓய்வு பெற்ற நீதிபதி முருகேசன் தலைமையில் கமிட்டி அமைக்கப்பட்டது.இந்த கமிட்டியின் பரிந்துரைப்படி, இன்ஜினியரிங், சட்டம்

சென்னை:தொழிற்கல்வி படிப்புகளில், அரசு பள்ளி மாணவர்களுக்கான, 7.5 சதவீத இட ஒதுக்கீடு குறித்து, நீதிபதி முருகேசன் கமிட்டியின் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

அரசு பள்ளி மாணவர்களுக்கு, தொழிற்கல்வி படிப்புகளில் இட ஒதுக்கீடு வழங்குவது குறித்து ஆய்வு செய்ய, ஓய்வு பெற்ற நீதிபதி முருகேசன் தலைமையில் கமிட்டி அமைக்கப்பட்டது.இந்த கமிட்டியின் பரிந்துரைப்படி, இன்ஜினியரிங், சட்டம் உள்ளிட்ட தொழிற்கல்வி படிப்புகளில், அரசு பள்ளி மாணவர்களுக்கு, 7.5 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்படுகிறது.இந்நிலையில், முருகேசன் கமிட்டியின் அறிக்கை நேற்று வெளியிடப்பட்டது.

அதன் விபரம்:இன்ஜினியரிங் கவுன்சிலிங் வழியே, 2019- - 20ம் ஆண்டில், 5.59 சதவீதம்;
2020- - 21ம் ஆண்டில், 6.14 சதவீத அரசு பள்ளி மாணவர்கள், பி.இ., படிப்பில் சேர்ந்துள்ளனர். ஆண்டு தோறும், 5,000 மாணவியர்; 7,700 மாணவர்கள் வரை சேர்ந்துள்ளனர்.கால்நடை மருத்துவ படிப்பில், ஐந்து ஆண்டுகளில், 3 - 6 சதவீதம் வரை, அரசு பள்ளி மாணவர்கள் சேர்ந்துள்ளனர். மீன்வள படிப்பில், 10 ஆண்டுகளில் சராசரியாக, 10 சதவீதம் அரசு பள்ளி மாணவர்கள் சேர்ந்துள்ளனர்.

வேளாண் படிப்பில், 6 முதல், 8.27 சதவீதம் பேர் வரை அரசு பள்ளி மாணவர்களாக உள்ளனர். சட்டப்படிப்புகளில் ஐந்து ஆண்டுகளில், சராசரியாக 20 சதவீதம் அரசு பள்ளி மாணவர்கள் சேர்ந்துஉள்ளனர்.இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X