கோர்ட் செய்தி

தமிழ்நாடு

பிராந்திய மொழிகளில் வரைவு அறிக்கை உயர் நீதிமன்றத்தில் மத்திய அரசு தகவல்

Added : செப் 23, 2021
Share
Advertisement
சென்னை:சுற்றுச்சூழல் பாதிப்பு மதிப்பீட்டு வரைவு அறிக்கையை, பிராந்திய மொழிகளில் வெளியிட உள்ளதாக, சென்னை உயர் நீதிமன்றத்தில், மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.கடந்த ஆண்டு மார்ச்சில், சுற்றுச்சூழல் பாதிப்பு மதிப்பீட்டு வரைவு அறிக்கையை, மத்திய அரசு வெளியிட்டது. ஹிந்தி மற்றும் ஆங்கில மொழிகளில் மட்டும் அரசிதழிலில் வெளியிடப்பட்டது. ஆட்சேபனை, கருத்துக்கள்

சென்னை:சுற்றுச்சூழல் பாதிப்பு மதிப்பீட்டு வரைவு அறிக்கையை, பிராந்திய மொழிகளில் வெளியிட உள்ளதாக, சென்னை உயர் நீதிமன்றத்தில், மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

கடந்த ஆண்டு மார்ச்சில், சுற்றுச்சூழல் பாதிப்பு மதிப்பீட்டு வரைவு அறிக்கையை, மத்திய அரசு வெளியிட்டது. ஹிந்தி மற்றும் ஆங்கில மொழிகளில் மட்டும் அரசிதழிலில் வெளியிடப்பட்டது. ஆட்சேபனை, கருத்துக்கள் தெரிவிக்க அவகாசமும் வழங்கப்பட்டது.இதையடுத்து, அனைத்து மாநில மொழிகளிலும் வரைவு அறிக்கையை வெளியிட கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில், வழக்கறிஞர் ராம்குமார் ஆதித்தன் வழக்கு தொடர்ந்தார்.

அதேபோல், பூவுலகின் நண்பர்கள் அமைப்பின் நிர்வாகி சுந்தரராஜன், கே.ஆர்.செல்வராஜ்குமார் மீனவர் நல சங்க தலைவர் தியாகராஜன் ஆகியோரும் மனுக்கள் தாக்கல் செய்தனர்.இம் மனுக்கள் தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி, நீதிபதி ஆதிகேசவலு அடங்கிய 'முதல் பெஞ்ச்' முன், நேற்று விசாரணைக்கு வந்தது.மத்திய அரசு சார்பில், மூத்த வழக்கறிஞர் ஆதி.குமரகுரு ஆஜராகி, ''பிராந்திய மொழிகளில் வரைவு அறிக்கை வெளியிட, டில்லி உயர் நீதிமன்றத்தில், மத்திய அரசு ஒப்புக் கொண்டுள்ளது. அதன்படி, அறிவிப்பு வெளியிடப்படும்,'' என்றார்.

இதையடுத்து, முதல் பெஞ்ச் பிறப்பித்த உத்தரவில், 'மத்திய அரசு அறிவிப்பு, வழிமுறை வெளியிட அவகாசம் கோரப்பட்டுள்ளது. பொது மக்கள் விரிவாக பங்கேற்பதை கவனத்தில் கொள்ள வேண்டும் என்ற கோரிக்கைக்கும், மத்திய அரசு தீர்வு காணலாம்' என கூறப்பட்டு உள்ளது.விசாரணையை, டிச.,8க்கு, முதல் பெஞ்ச் தள்ளி வைத்துள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X