அரசியல் செய்தி

தமிழ்நாடு

2024ல் சட்டசபைக்கும் தேர்தல்: பழனிசாமி ஆரூடம்

Added : செப் 23, 2021
Share
Advertisement
ஓமலுார்:''வரும் 2024ல் ஒரே நாடு; ஒரே தேர்தல் என தெரிவிக்கின்றனர். அதே நேரத்தில், பார்லிமென்ட் தேர்தலுடன் சட்டசபை தேர்தல் வர வாய்ப்புள்ளது,'' என, எதிர்க்கட்சி தலைவர் பழனிசாமி கூறினார்.சேலம் மாவட்டம், ஓமலுாரில் அவர் அளித்த பேட்டி:கூட்டுறவு சங்க தலைவர்கள், கட்சி சார்ந்தவர்களாக தேர்வு செய்வது கிடையாது. சங்கத்தில் முறைகேடு நடந்திருந்தால் நடவடிக்கை எடுப்பது அரசின்
 2024ல் சட்டசபைக்கும் தேர்தல்: பழனிசாமி ஆரூடம்

ஓமலுார்:''வரும் 2024ல் ஒரே நாடு; ஒரே தேர்தல் என தெரிவிக்கின்றனர். அதே நேரத்தில், பார்லிமென்ட் தேர்தலுடன் சட்டசபை தேர்தல் வர வாய்ப்புள்ளது,'' என, எதிர்க்கட்சி தலைவர் பழனிசாமி கூறினார்.

சேலம் மாவட்டம், ஓமலுாரில் அவர் அளித்த பேட்டி:கூட்டுறவு சங்க தலைவர்கள், கட்சி சார்ந்தவர்களாக தேர்வு செய்வது கிடையாது. சங்கத்தில் முறைகேடு நடந்திருந்தால் நடவடிக்கை எடுப்பது அரசின் கடமை.நகை தள்ளுபடி கிடைக்குமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம். ஏனெனில் தி.மு.க., தேர்தல் அறிக்கையில் கூறியதை நிறைவேற்றியதாக சரித்திரம் இல்லை.'தேசிய மயமாக்கப்பட்ட வங்கியில் உள்ள நகை கடன்கள் தள்ளுபடி செய்யப்படும்' என, ஸ்டாலின் பிரசாரத்தில் தெரிவித்தார்.

தற்போது, கூட்டுறவு வங்கியில் மட்டும் என தெரிவித்துள்ளனர். எவ்வளவு பேருக்கு கிடைக்கும் என பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். வரும் 2024ல் ஒரே நாடு, ஒரே தேர்தல் என தெரிவிக்கின்றனர். அதே நேரத்தில், பார்லிமென்ட் தேர்தலுடன் சட்டசபை தேர்தல் வர வாய்ப்புள்ளது.முன்னாள், இன்னாள் அமைச்சர்கள் 13 பேர் மீது வழக்கு நிலுவையில் உள்ளது. ஊடகத்தினர் நடுநிலையோடு செயல்பட வேண்டும். ஆனால், ஆளுங்கட்சிக்கு, 'ஜால்ரா' போடும்படி உள்ளது. எதிராக செய்தி வெளியிட பயப்படுகிறீர்கள்.

தி.மு.க., ஆட்சி பொறுப்பேற்று நான்கு மாதமாகிவிட்டது. அ.தி.மு.க.,வினர் மீது வழக்கு போடுவது, அவதுாறு பரப்புவது மட்டும், தி.மு.க., கொள்கையாக செய்து வருகிறது. மக்களுக்கு நல்லது செய்ய ஸ்டாலின் அரசு முன்வரவில்லை. அ.தி.மு.க.,வுக்கு மடியில் கனம் இல்லை. வழியிலும் பயம் இல்லை. சேகர் ரெட்டி டைரி குறித்து எந்த நோட்டீசும் வரவில்லை.

செந்தில் பாலாஜி அ.தி.மு.க.,வில் இருந்தபோது, சட்டசபையில் ஸ்டாலின் குறித்து பேசியதும், அவர், செந்தில் பாலாஜி குறித்து பேசியதும் சபை குறிப்பில் உள்ளது. அவர் மீது வழக்கு உள்ளது. யாராவது, அதுகுறித்து கேட்கிறீர்களா? தி.மு.க., இப்படிப்பட்டவர்களை அமைச்சர்களாக வைத்துள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X