பொது செய்தி

தமிழ்நாடு

21 ஆயிரம் தீப்பெட்டியில் அப்துல் கலாம் உருவம்: கல்லூரி மாணவர்கள் சாதனை

Updated : செப் 23, 2021 | Added : செப் 23, 2021
Share
Advertisement
சிவகங்கை: காளையார்கோவில் புனித மைக்கேல் இன்ஜி., கல்லுாரி மாணவர்கள் உலக சாதனைக்காக 21 ஆயிரம் தீப்பெட்டிகளை அடுக்கி 2 நிமிடம் 10 செகன்டில் அப்துல் கலாம் உருவத்தை ஏற்படுத்தினர்.சிவகங்கை மாவட்டம், காளையார்கோவில் புனித மைக்கேல் இன்ஜி., கல்லுாரி 2 ம் ஆண்டு மாணவர்கள் 49 பேர் உலக சாதனைக்காக நேற்று கல்லுாரி வளாகத்தில் 21 ஆயிரம் தீப்பெட்டிகளை 2 நிமிடம் 10 செகன்டிற்குள் அடுக்கி, அதை
21 ஆயிரம் தீப்பெட்டியில் அப்துல் கலாம் உருவம்: கல்லூரி மாணவர்கள் சாதனை

சிவகங்கை: காளையார்கோவில் புனித மைக்கேல் இன்ஜி., கல்லுாரி மாணவர்கள் உலக சாதனைக்காக 21 ஆயிரம் தீப்பெட்டிகளை அடுக்கி 2 நிமிடம் 10 செகன்டில் அப்துல் கலாம் உருவத்தை ஏற்படுத்தினர்.

சிவகங்கை மாவட்டம், காளையார்கோவில் புனித மைக்கேல் இன்ஜி., கல்லுாரி 2 ம் ஆண்டு மாணவர்கள் 49 பேர் உலக சாதனைக்காக நேற்று கல்லுாரி வளாகத்தில் 21 ஆயிரம் தீப்பெட்டிகளை 2 நிமிடம் 10 செகன்டிற்குள் அடுக்கி, அதை தட்டி விட்டதும் மறைந்த ஜனாதிபதி அப்துல்கலாம் முகத்தை உருவமாக வெளிக்காட்டி சாதனை படைத்தனர்.

இது போன்று கல்லுாரி லோகோ உள்ளிட்டவற்றை தீப்பெட்டிகளால் அடுக்கி சாதனை புரிந்தனர். நிகழ்ச்சியில் கல்லுாரி தலைவர் ஸ்டாலின் ஆரோக்கியராஜ், முதன்மை செயல் அதிகாரி பிரிட்ஜிட் நிர்மலா, முதல்வர் கற்பகம், பேராசிரியர் மதன்குமார் உட்பட பேராசிரியர்கள், மாணவர்கள் பங்கேற்றனர். உலக சாதனை படைத்த கல்லுாரி மாணவர்களுக்கு சோழன் புக் ஆப் ரெக்கார்ட்ஸ்' விருது வழங்கப்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X