சம்பவம் செய்தி

தமிழ்நாடு

11 ஆயிரம் போலி மதுபாட்டில்கள் மொட்டை மாடியில் பதுக்கல்: ஐவர் கைது; தி.மு.க., பிரமுகர் ஓட்டம்

Added : செப் 23, 2021 | கருத்துகள் (2)
Share
Advertisement
திண்டுக்கல்:திண்டுக்கல் அருகே பண்ணை வீட்டின் மொட்டை மாடியில் 11,136 போலி மதுபாட்டில்களை பதுக்கிய ஐந்து பேர் கைது செய்யப்பட்டனர். ஊராட்சி தலைவரின் கணவரான தி.மு.க., பிரமுகர் இன்பராஜ் 52, தப்பியோடினார். திண்டுக்கல் மாவட்டம் அனுமந்தராயன்கோட்டை பகுதியில் போலி மதுபாட்டில்கள் நடமாட்டம் உள்ளதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. ஏ.எஸ்.பி., அருண் கபிலன், இன்ஸ்பெக்டர் பாஸ்டின்
 11 ஆயிரம் போலி மதுபாட்டில்கள் மொட்டை மாடியில் பதுக்கல்: ஐவர் கைது; தி.மு.க., பிரமுகர் ஓட்டம்

திண்டுக்கல்:திண்டுக்கல் அருகே பண்ணை வீட்டின் மொட்டை மாடியில் 11,136 போலி மதுபாட்டில்களை பதுக்கிய ஐந்து பேர் கைது செய்யப்பட்டனர்.

ஊராட்சி தலைவரின் கணவரான தி.மு.க., பிரமுகர் இன்பராஜ் 52, தப்பியோடினார். திண்டுக்கல் மாவட்டம் அனுமந்தராயன்கோட்டை பகுதியில் போலி மதுபாட்டில்கள் நடமாட்டம் உள்ளதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. ஏ.எஸ்.பி., அருண் கபிலன், இன்ஸ்பெக்டர் பாஸ்டின் தினகரன் உட்பட அதிகாரிகள் குழு அங்கு சோதனையில் ஈடுபட்டது.

அனுமந்தராயன் கோட்டை ஊராட்சி தலைவர் நிர்மலாவின் கணவரும், தி.மு.க., பிரமுகருமான இன்பராஜூக்கு சொந்தமான தோட்டத்தில் உள்ள வீட்டின் மொட்டை மாடியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 11,136 போலி மதுபாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர். இன்பராஜ் தப்பியோடி விட்டார்.

அங்கு தங்கியிருந்த சிவகங்கை மாவட்டம் காளையார்கோவில் சிவா 23, சிங்கம்புணரி பிரபு 26, மறவமங்கலம் சண்முகபாண்டியன் 36, சங்கர்34, வெல்லேந்தல் வினோத் 20, ஆகிய ஐந்து பேரை போலீசார் கைது செய்தனர்.

Advertisement


வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
r.sundaram - tirunelveli,இந்தியா
23-செப்-202119:59:37 IST Report Abuse
r.sundaram பாவம் ஆரம்பகால தொழிலையே இன்னமும் செய்கிறார் போலிருக்கிறது. மற்றவர்கள் எல்லாம் கட்டப்பஞ்சாயத்து, நில ஆக்கிரமிப்பு என்று களைகட்டும் பொது இவர் மட்டும் இன்னமும் ஆரம்ப நிலையிலேயே இருக்கிறார், பாவம்.
Rate this:
Cancel
பெரிய ராசு - தென்காசி ,இந்தியா
23-செப்-202116:44:35 IST Report Abuse
பெரிய ராசு விடியல் தந்தாச்சு தலீவரே ...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X