கோர்ட் செய்தி

தமிழ்நாடு

மாஜி விமானப்படை அதிகாரி கொலை சம்பந்தி உட்பட 3 பேருக்கு ஆயுள்

Added : செப் 23, 2021
Share
Advertisement
ராமநாதபுரம்:ராமநாதபுரத்தில் 2017ல் குடும்ப பிரச்னையில் ஓய்வுபெற்ற விமானப்படை அதிகாரி கொலை வழக்கில், அவரது சம்பந்தி உட்பட 3பேருக்கு ஆயுள் தண்டனை வழங்கி நீதிமன்றம் தீர்ப்பளித்துஉள்ளது.ராமநாதபுரம் மகாசக்திநகரைச் சேர்ந்த ஓய்வுபெற்ற விமானப்படைஅதிகாரி சந்திரசேகரன் 64, இவரது மகனுக்கும், ராமநாதபுரம் பிருந்தாவன கார்டனைச் சேர்ந்த பார் உரிமையாளர் வீராச்சாமி 55, மகளுக்கும்

ராமநாதபுரம்:ராமநாதபுரத்தில் 2017ல் குடும்ப பிரச்னையில் ஓய்வுபெற்ற விமானப்படை அதிகாரி கொலை வழக்கில், அவரது சம்பந்தி உட்பட 3பேருக்கு ஆயுள் தண்டனை வழங்கி நீதிமன்றம் தீர்ப்பளித்துஉள்ளது.

ராமநாதபுரம் மகாசக்திநகரைச் சேர்ந்த ஓய்வுபெற்ற விமானப்படைஅதிகாரி சந்திரசேகரன் 64, இவரது மகனுக்கும், ராமநாதபுரம் பிருந்தாவன கார்டனைச் சேர்ந்த பார் உரிமையாளர் வீராச்சாமி 55, மகளுக்கும் திருமணமானது.கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வாழ்வதால் இரு குடும்பத்தினர் இடையே பிரச்னை ஏற்பட்டது.
2017 ஜூலையில் சந்திரசேகரன் 'சி' பிளாக் பஸ்ஸ்டாப் அருகே நடைப்பயிற்சி மேற்கொண்ட போது அவரை வீராச்சாமி,அவரது உறவினர்கள் வாலந்தரவையைசேர்ந்த அருண்குமார் 27,சடையன்வலசையைச் சேர்ந்த அருண்பாண்டி 21, ஆகியோர் வெட்டிகொலை செய்தனர். 3 பேரையும் கேணிக்கரை போலீசார் கைதுசெய்தனர்.

இந்த வழக்கு ராமநாதபுரம் மாவட்ட முதன்மைநீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடந்தது. வீராச்சாமி, அருண்குமார்,அருண்பாண்டி ஆகியோருக்கு ஆயுள் தண்டனையும், தலா ரூ.11ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதிசண்முகசுந்தரம் உத்தரவிட்டார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X