சம்பவம் செய்தி

தமிழ்நாடு

மதுரையில் கள்ள நோட்டுகளுடன் 10 பேர் கைது

Added : செப் 23, 2021
Share
Advertisement
திருமங்கலம்:மதுரை மாவட்டம் கள்ளிக்குடி அருகே ரூ.2 ஆயிரம், ரூ.500, ரூ.100 கள்ளநோட்டுகளுடன் 2 கார்களில் வந்த 10 பேரை போலீசார் கைது செய்தனர்.நேற்று முன்தினம் இரவு கள்ளிக்குடியில் இன்ஸ்பெக்டர் ராதா மகேஷ் தலைமையிலான போலீசார் வாகன சோதனையின்போது இரு கார்களை சோதனையிட்டனர். பைகளில் கட்டு கட்டாக கலர் ஜெராக்ஸ் எடுக்கப்பட்ட ரூபாய் நோட்டுகள் இருந்தன. போலீஸ் எஸ்.ஐ., சீருடையும்

திருமங்கலம்:மதுரை மாவட்டம் கள்ளிக்குடி அருகே ரூ.2 ஆயிரம், ரூ.500, ரூ.100 கள்ளநோட்டுகளுடன் 2 கார்களில் வந்த 10 பேரை போலீசார் கைது செய்தனர்.

நேற்று முன்தினம் இரவு கள்ளிக்குடியில் இன்ஸ்பெக்டர் ராதா மகேஷ் தலைமையிலான போலீசார் வாகன சோதனையின்போது இரு கார்களை சோதனையிட்டனர். பைகளில் கட்டு கட்டாக கலர் ஜெராக்ஸ் எடுக்கப்பட்ட ரூபாய் நோட்டுகள் இருந்தன. போலீஸ் எஸ்.ஐ., சீருடையும் இருந்தது.விசாரணையில் பணத்தை இரட்டிப்பாக்கி தருவது போல் கள்ள நோட்டுகளை தந்து ஏமாற்றும் கும்பல் எனத்தெரிந்தது.

ஏமாந்தவர்கள் மிரட்டினால் போலீஸ் போல் நடித்து மிரட்ட எஸ்.ஐ., சீருடை வைத்திருந்தனர். காரில் வந்த கரூர் வெங்கமேடு யோகராஜ் 38, சென்னை சுனில்குமார் 49, மதுரை கருப்பாயூரணி அன்பு என்ற அன்பரசன் 31, கேரளா கோட்டயம் டோமி தாமஸ் 50, கோவை கருமத்தம்பட்டி அக்பர் 60, திண்டுக்கல் நிலக்கோட்டை ஹீமாயூன் 42, மதுரை கள்ளிக்குடி தண்டீஸ்வரன் 33, ஈரோடு மூலப்பாளையம் சரவணன் 37, நாமக்கல் பரமத்தி வேலுார் ரமேஷ் 37, வேலுார் காட்பாடி பொன்ராஜ் 66, ஆகியோரை கைது செய்தனர். 2 கார்கள், கள்ள நோட்டுக்கள் பறிமுதல் செய்தனர். அன்பரசன், ஹீமாயூன் மீது கள்ளிக்குடி போலீசில் மோசடி வழக்கு நிலுவையில் உள்ளது. கைது செய்த போலீசாரை எஸ்.பி., பாஸ்கரன் பாராட்டினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X