தமிழக தலைவர்களின் டுவிட்| Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

தமிழக தலைவர்களின் டுவிட்

Added : செப் 23, 2021
Share
சமத்துவத்திற்கும், சமூகநீதிக்கும் எதிரான உயிர்க் கொல்லித் தேர்வு நீட். - கமல், ம.நீ.ம., தலைவர்நீட் சமூகநீதிக்கு எதிரானது என்பதாலும், அதில் பெருமளவில் முறைகேடுகள் நடப்பதாலும் அதிலிருந்து மஹாராஷ்டிராவுக்கு விலக்கு பெற வேண்டும் என அம்மாநில முதல்வருக்கு ஆளும் கூட்டணியில் உள்ள காங்., மாநிலத் தலைவர் கடிதம் எழுதியுள்ளார். நீட் ஒரு சமூக அநீதி என்பதற்கு இது சாட்சி. - அன்புமணி,

சமத்துவத்திற்கும், சமூகநீதிக்கும் எதிரான உயிர்க் கொல்லித் தேர்வு நீட்.

- கமல், ம.நீ.ம., தலைவர்

நீட் சமூகநீதிக்கு எதிரானது என்பதாலும், அதில் பெருமளவில் முறைகேடுகள் நடப்பதாலும் அதிலிருந்து மஹாராஷ்டிராவுக்கு விலக்கு பெற வேண்டும் என அம்மாநில முதல்வருக்கு ஆளும் கூட்டணியில் உள்ள காங்., மாநிலத் தலைவர் கடிதம் எழுதியுள்ளார். நீட் ஒரு சமூக அநீதி என்பதற்கு இது சாட்சி.

- அன்புமணி, பா.ம.க., இளைஞரணி தலைவர்

ஏ.கே.ராஜன் கமிட்டியின் அறிக்கை. நீட் தேர்வின் தாக்கம் குறித்த ஆய்வறிக்கை அல்ல. தேசியத்திற்கு எதிரான திராவிடத்தின் குற்றப்பத்திரிக்கையே. மாணவர்கள் தமிழால் தாழ்ந்தார்களா அல்லது திராவிடத்தால் வீழ்ந்தார்களா என தொடர்ந்து பார்ப்போம்.

- கிருஷ்ணசாமி, புதிய தமிழகம் தலைவர்

அரசு உதவிப்பெறும் பள்ளி மாணவர்களுக்கு மருத்துவம், பொறியியல் படிப்புகளில் 2.5 விழுக்காடு சிறப்பு இட ஒதுக்கீடு வழங்கிட தமிழக அரசுஉடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

- சீமான், நாம் தமிழர் தலைமை ஒருங்கிணைப்பாளர்

தமிழக அரசு தமிழகத்தின் தற்போதைய சூழலில் கொரோனா தடுப்பு, மழைக்கால நடவடிக்கைகள், 100 நாள் வேலைவாய்ப்புத் திட்டம் ஆகியவற்றில் அதிக கவனம் செலுத்தி மக்கள் நலன் காக்க வேண்டும்.

- வாசன், த.மா.கா., தலைவர்

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X