சம்பவம் செய்தி

தமிழ்நாடு

ஹெராயின் போதைப் பவுடர் கடத்தல் 4 தலிபான்கள் உட்பட 8 பேர் கைது

Added : செப் 23, 2021
Share
Advertisement
சென்னை:ஹெராயின் போதைப் பவுடர் கடத்தல் வழக்கில் இதுவரை நான்கு தலிபான்கள் உட்பட 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.ஆப்கானிஸ்தானில் இருந்து ஈரானின் பண்டார் அப்பாஸ் துறைமுகம் வழியாக குஜராத் முந்த்ரா துறைமுகத்திற்கு கப்பலில் இரண்டு கன்டெய்னர்களில் கடத்தப்பட்ட 21 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள ஹெராயின் போதைப் பவுடரை சமீபத்தில் மத்திய வருவாய் புலனாய்வு துறை அதிகாரிகள்

சென்னை:ஹெராயின் போதைப் பவுடர் கடத்தல் வழக்கில் இதுவரை நான்கு தலிபான்கள் உட்பட 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஆப்கானிஸ்தானில் இருந்து ஈரானின் பண்டார் அப்பாஸ் துறைமுகம் வழியாக குஜராத் முந்த்ரா துறைமுகத்திற்கு கப்பலில் இரண்டு கன்டெய்னர்களில் கடத்தப்பட்ட 21 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள ஹெராயின் போதைப் பவுடரை சமீபத்தில் மத்திய வருவாய் புலனாய்வு துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

இது தொடர்பாக ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் ஆஷி டிரேடிங் கம்பெனி என்ற பெயரில் ஏற்றுமதி இறக்குமதி நிறுவனம் நடத்தி வந்த சென்னை போரூர் கொளப்பாக்கத்தில் வசித்து வரும் மச்சாவரம் சுதாகர் அவரது மனைவி கோவிந்தராஜூ துர்கா பூரண வைஷாலி ஆகியோரை கைது செய்துள்ளனர்.மேலும் போதை பவுடர் கடத்தல் தொடர்பாக சென்னை கோவை டில்லி நொய்டா ஆமதாபாத் விஜயவாடா உள்ளிட்ட இடங்களில் சோதனை நடத்தி முக்கிய ஆவணங்களை கைப்பற்றி உள்ளனர்.

டில்லியில் குடோன் ஒன்றில் பதுக்கி இருந்த 16.01 கிலோ ஹெராயின் நொய்டாவில் 10.02 கிலோ கோகைன் மற்றும் 11 கிலோ ஹெராயின் பவுடர் பறிமுதல் செய்துள்ளனர்.நாட்டில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ள இந்த போதைப் பவுடர் கடத்தல் வழக்கில் ஆப்கானிஸ்தான் நாட்டைச் சேர்ந்த தலிபான்கள் நான்கு பேர் உஸ்பெகிஸ்தானை சேர்ந்த ஒருவர் மற்றும் சுதாகர் கோவிந்தராஜூ துர்கா பூரண வைஷாலி உட்பட எட்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என மத்திய அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X