சர்வதேச பயணங்கள் எளிதாக்கப்பட வேண்டும்: பிரதமர் மோடி பேச்சு

Updated : செப் 23, 2021 | Added : செப் 23, 2021 | கருத்துகள் (4)
Share
Advertisement
வாஷிங்டன்: ''கொரோனா தடுப்பூசி சான்றிதழ் விவகாரத்தில் ஒவ்வொரு நாடும் ஒவ்வொரு விதமான விதிமுறைகளை கடைபிடிக்கும் நிலையில், பரஸ்பர அங்கீகாரம் வாயிலாக, சர்வதேச பயணங்களை எளிதாக்க வேண்டும்,''என, பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.'குவாட்' மாநாட்டில் பங்கேற்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி, நான்கு நாள் பயணமாக நேற்று அமெரிக்கா புறப்பட்டு சென்றார். இந்நிலையில், அமெரிக்க
International travel, vaccine certificates, PM Modi, Global Covid 19 Summit, Modi,Narendra Modi,நரேந்திர மோடி,மோடி

வாஷிங்டன்: ''கொரோனா தடுப்பூசி சான்றிதழ் விவகாரத்தில் ஒவ்வொரு நாடும் ஒவ்வொரு விதமான விதிமுறைகளை கடைபிடிக்கும் நிலையில், பரஸ்பர அங்கீகாரம் வாயிலாக, சர்வதேச பயணங்களை எளிதாக்க வேண்டும்,''என, பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.

'குவாட்' மாநாட்டில் பங்கேற்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி, நான்கு நாள் பயணமாக நேற்று அமெரிக்கா புறப்பட்டு சென்றார். இந்நிலையில், அமெரிக்க அதிபர் ஜோ பைடன் ஏற்பாடு செய்திருந்த சர்வதேச கொரோனா உச்சி மாநாட்டில், 'வீடியோ' வாயிலாக பிரதமர் நரேந்திர மோடி பேசியதாவது:


latest tamil news


உலகின் பல நாடுகளில் தடுப்பூசியின் தேவை உள்ளது. இந்த நேரத்தில், 'பைஸர்' தடுப்பூசி கொள்முதலை இரட்டிப்பாக்கி, அதை தேவை உள்ள நாடுகளுக்கும் வழங்க உள்ளதாக, அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அறிவித்து இருப்பது வரவேற்கதக்கது. தொற்று பரிசோதனை கருவிகள், மருந்துகள், மருத்துவ உபகரணங்கள், பாதுகாப்பு கவச உடைகளை மிக குறைந்த விலையில் தயாரித்து வழங்கிய இந்திய மருந்து தயாரிப்பு நிறுவனங்களின் பணி பாராட்டுக்குரியது.

எனவே தான், அதை பல நாடுகள் குறைந்த செலவில் கொள்முதல் செய்ய முடிந்தது.இந்த ஆண்டு துவக்கத்தில் நாங்கள் 95 நாடுகளுடன் தடுப்பூசியை பகிர்ந்து கொண்டோம். இரண்டாம் அலையினால் இந்தியா தத்தளித்த போது, உலகமே ஒரு குடும்பம் போல திரண்டு எங்களுக்கு உறுதுணையாக நின்றது. உடன் நின்ற அனைத்து நாடுகளுக்கும் நன்றி. இந்தியாவில் தடுப்பூசி போடும் பணி முழுவீச்சில் நடக்கிறது.

இதுவரை 83 கோடி மக்களுக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. 20 கோடி பேருக்கு இரண்டு, 'டோஸ்' தடுப்பூசி போடப்பட்டுள்ளது. சமீபத்தில் ஒரே நாளில், 2.50 கோடி பேருக்கு தடுப்பூசி போட்டு, இந்தியாவில் புதிய சாதனை நிகழ்த்தப்பட்டது. கொரோனா தொற்று பரவல் இன்னும் முடிவுக்கு வரவில்லை.இதனால் ஏற்பட்டுள்ள பொருளாதார வீழ்ச்சியில் இருந்து நாம் மீள்வது குறித்து கவனம் செலுத்த வேண்டும்.


latest tamil newsகொரோனா தடுப்பூசி சான்றிதழ் வழங்குவதில் ஒவ்வொரு நாடும் ஒவ்வொரு விதமான நடைமுறையை பின்பற்றுகின்றன. இதில், பரஸ்பர அங்கீகாரத்தை பின்பற்றுவதன் வாயிலாக சர்வதேச பயணங்களை எளிதாக்க வேண்டும்.இவ்வாறு அவர் பேசினார்.

'கோவிஷீல்டு' தடுப்பூசிக்கு அங்கீகாரம் வழங்கிய நிலையில், அந்த தடுப்பூசி போட்ட இந்திய பயணியருக்கு தனிமைபடுத்துதல் கட்டாயம் என, பிரிட்டன் அரசு நேற்று அறிவித்தது. இந்நிலையில், பிரதமர் மோடியின் இந்தக் கருத்து முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

Advertisement
வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
23-செப்-202111:36:30 IST Report Abuse
அப்புசாமி இங்கேருந்து வாஷிண்டன் போய் அங்கே வீடியோவுல பேசுவாரு... தலடா...
Rate this:
Cancel
Sampath Kumar - chennai,இந்தியா
23-செப்-202108:17:18 IST Report Abuse
Sampath Kumar எப்படி ஜி ? உங்களுக்கு என்று கோடிக்கணக்கில் விமானம் வாங்குனாப்ல மக்களுக்கும் வாகி தர போறீர்களா ? உங்க நன்பர் அதனை அம்பானிக்கு டெண்டர் கொடுக்க திட்டமா ??
Rate this:
Cancel
selva - tiruvarur,ஓமன்
23-செப்-202106:52:40 IST Report Abuse
selva நீங்க எப்ப சர்வ விமான போக்குவரத்துக்கான தடையை நீக்க போகிறீர்கள் இந்தியாவிலுருந்து அரபு நாடுகளுக்கு செல்ல கட்டணம் இரண்டு மடங்கு உள்ளது
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X