பொது செய்தி

இந்தியா

முதலியார்பேட்டை தொகுதியில் ரூ. 7.14 கோடியில் வெள்ள வடிகால் பணி

Added : செப் 23, 2021
Share
Advertisement
புதுச்சேரி-முதலியார்பேட்டை தொகுதியில், ரூ. 7.14 கோடி செலவில் வெள்ள வடிகால் பணி துவக்கப்பட்டுள்ளது.முதலியார்பேட்டை உழந்தை வருவாய் கிராமத்தில் பள்ள வாய்க்காலில் இருந்து வரும் வெள்ள உபரிநீர் ஜெயமூர்த்தி ராஜா நகர் வழியாக சென்று மரப்பாலத்தை அடைகிறது. இது அப்பகுதியில் வெள்ள பாதிப்பை ஏற்படுத்துகிறது.இதுகுறித்து தொகுதி எம்.எல்.ஏ., சம்பத் சட்டசபையில் பேசினார். அதை தொடர்ந்து,

புதுச்சேரி-முதலியார்பேட்டை தொகுதியில், ரூ. 7.14 கோடி செலவில் வெள்ள வடிகால் பணி துவக்கப்பட்டுள்ளது.முதலியார்பேட்டை உழந்தை வருவாய் கிராமத்தில் பள்ள வாய்க்காலில் இருந்து வரும் வெள்ள உபரிநீர் ஜெயமூர்த்தி ராஜா நகர் வழியாக சென்று மரப்பாலத்தை அடைகிறது. இது அப்பகுதியில் வெள்ள பாதிப்பை ஏற்படுத்துகிறது.இதுகுறித்து தொகுதி எம்.எல்.ஏ., சம்பத் சட்டசபையில் பேசினார். அதை தொடர்ந்து, உழந்தை ஏரியின் உபரி நீர் வடிகால் வாய்க்கால், கான்கிரீட் வாய்க்காலாக 500 மீட்டர் நீளத்திற்கு அமைக்கப்பட உள்ளது.உழந்தை ஏரி, முருங்கப்பாக்கம் ஏரி இடையில் உள்ள கரையில் பாலம் அமைக்கப்பட உள்ளது.இக்கட்டுமான பணிகளை ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் ரூ. 7.14 கோடி செலவில் மேற்கொள்ள அரசாணை வெளியிடப்பட்டது.வாய்க்கால் பணியை சம்பத் எம்.எல்.ஏ., முன்னிலையில், அமைச்சர் லட்சுமி நாராயணன் துவக்கி வைத்தார் .பொதுப்பணித் துறை தலைமை பொறியாளர் சத்தியமூர்த்தி, ஸ்மார்ட் சிட்டி தலைமை தொழில்நுட்ப அதிகாரி சிவகுமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X